தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்வரத்து பாதையில் விதிமீறி அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்களை அகற்றக் கோரிக்கை

6 Jul 2026, 9:37 pm
நீர்வரத்து பாதையில் விதிமீறி அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்களை அகற்றக் கோரிக்கை
<p><strong>நீர்வரத்து பாதையில் விதிமீறி அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்களை அகற்றக் கோரிக்கை</strong></p><p>விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் நீர் வரத்து ஓடையில் விதிமுறை களை மீறி சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்பட் டுள்ளதால், அவற்றை உடன டியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயி கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி யின் முக்கிய நீர் ஆதாரமாக நீராவிக்குளம் உள்ளது. இந்தக் குளத்திற்கு மழைக்காலங்களில் தண் ணீர் வரும் பிரதான நீர்வரத்து ஓடையில், விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் சோலார் மின் திட்டத்திற்காக மின் கம் பங்களை அமைத்து வருவ தாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் நீர்வரத்து ஓடை யின் மையப்பகுதியிலேயே கம்பங்கள் நடப்பட்டுள்ள தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக் குச் செல்வதற்கும், அறு வடை செய்யப்பட்ட விளை பொருட்களை டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்வதற் கும் இந்த நீர்வரத்து ஓடை யையே பாதையாக பயன் படுத்தி வருகின்றனர். தற் போது அங்கு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிராக்டர்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது டன், விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மழைக் காலங்களில் குளத்திற்கு தண் ணீர் வருவதிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்ப தாக விவசாயிகள் தெரிவித் துள்ளனர். எனவே, நீர்வரத்து பாதை யில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் கம்பங்களை உடனடியாக அகற்றி, நீர் வரத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.