தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக் கடன் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன் வழங்கல்

28 Oct 2026, 9:32 pm
17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக் கடன் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன் வழங்கல்

17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக் கடன் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன் வழங்கல்

விருதுநகர், அக்.28-விருதுநகர் மாவட்டத் தில் 17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக் கடன் களையும், 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன்களையும் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி வழங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத் தில் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காகப் பல் வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு வங்கிகள் மூலம்கல்விக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே மேற்கொண்டு வரும் தொழில் களை விரிவுபடுத்துவதற் கும் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கல்வி மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாமில், 17 மாணவர் களுக்கு ரூ.1.54 கோடி கல் விக் கடனும், சிறு, குறு தொழில்களில் ஈடுபடும் 49பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி கடனுதவியும் வழங் கப்பட்டன என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் சம்பகேஸ்வர் பிரதான், முன்னோடி வங்கி மேலாளர்பாலசுப்பிரமணியன், மாவட் டத் தொழில் மையப் பொது மேலாளர் கண்ணன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.