தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு புத்துணர்வு முகாம்

14 Aug 2026, 9:49 pm
போதைப் பழக்கத்திலிருந்து  மீண்டவர்களுக்கு புத்துணர்வு முகாம்

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு புத்துணர்வு முகாம்

விருதுநகர், ஆக.,14-விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனநலத்துறையின் சார்பில் . ‘விடுதலை பெற்றோம்’ என்ற தலைப்பில்புத்துணர்வு முகாம் நடைபெற்றது.

போதை பழக்கத்திற்கு அடிமையாகி விருதுநகர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார்.அப்போது அவர் கூறுகையில் , அரசுக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் கடந்த 18 மாதங்களாக 20 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த உள்நோயாளிகள் பிரிவு தனிவளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தினசரி கவனிப்பு, மனநல ஆலோசகர்கள், செவிலியர்களின் சிறந்த கண்காணிப்பு மூலம் பலர் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 5915 வெளிநோயாளிகளும், 523 உள்நோயாளிகளும்பயனடைந்துள்ளனர் என்றார்.

இதில்,போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மருத்துவமைனை துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு , மனநலத்துறை துறைத்தலைவர் காட்சன், நிலைய மருத்துவர் வைஷ்ணவி, மனநலமருத்துவர்கள் பூங்கொடி, சதீஷ் சங்கர் மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.