தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் : பொதுமக்கள் அவதி

17 Jun 2026, 8:57 pm
குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் : பொதுமக்கள் அவதி

குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் : பொதுமக்கள் அவதி

விருதுநகர், ஜூன் 17- விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு மற்றும் ஒளவையார் தெரு பகுதி களில் கடந்த 3 மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

நகராட்சியின் 24-வது வார்டில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு மற்றும் 25-வது வார்டில் உள்ள தெற்கு ரதவீதி, ஒளவையார் தெரு பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு அஹமது நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகி க்கப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜெயக் குமார், நகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரி கூறுகையில், “குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நகராட்சி வழங்கும் தண்ணீ ரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் வாகனங்கள் மூலம் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்து வதுடன், கூடுதலாக குடிநீர் வாங்குவதற்கும் செலவழிக்க வேண்டியிருப்பதால் பொருளாதார சுமை அதிகரித்துள்ளது. எனவே, குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குடிநீர் மாசுபாடு காரணமாக பொதுமக்கள் சுகாதார பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.