முந்தய பக்கம்

காய்கறித் தொகுப்பு விற்பனை விருதுநகரில் தொடக்கம்

5 Nov 2026, 10:37 pm
காய்கறித் தொகுப்பு விற்பனை விருதுநகரில் தொடக்கம்

காய்கறித் தொகுப்பு விற்பனை விருதுநகரில் தொடக்கம்

விருதுநகர், நவ.5–தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகரில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தொடங்கி வைத்தார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், பெரிய வெங்காயம், தக்காளி தலா 500 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 250 கிராம், கேரட், பீன்ஸ் தலா 200 கிராம், பச்சை மிளகாய், எலுமிச்சை தலா 100 கிராம்,இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 முதல் 450 கிராம் வரை வழங்கப்படுகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram