தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

14 Jul 2026, 9:57 pm
திருச்சி விரைவு செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 14 சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம்

விருதுநகர், ஜூலை 14- விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 சார்பு ஆய்வாளர்களை நிர்வாக காரணங்களுக்காக இட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை உள் ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய சார்பு ஆய்வா ளர்கள் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

சிவகங்கை, ஜூலை 14- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பவரை கைது செய்து அவரிட மிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

ராஜுக்கள் கல்லூரியில் தாகூர் இலக்கிய மன்ற துவக்கம்

இராஜபாளையம், ஜூலை 14- இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் தாகூர் இலக்கிய மன்ற தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித் தார். சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானவேலா யுதம், ஆங்கிலத் துறைத் தலைவர் மருதநாயகம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் யோகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர் பிரதிநிதிகளுக்கு பதவியேற்பு உறுதி மொழி செய்து வைத்து, தாகூரின் இலக்கியப் படைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை ஆங்கி லத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

இராஜபாளையம் அருகே வீட்டில் 73.5 பவுன் நகை திருட்டு 4 மணி நேரத்தில் 2 பேர் கைது'

இராஜபாளையம் ஜூலை 14- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் எல்.ஐ.சி. அலுவலர் வீட்டில் 73.5 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்ட சம்பவத்தில், 4 மணி நேரத்திற்குள் 2 பேரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர். பிரபாகரன் குடும்பத்துடன் குற்றாலம் சென்றிருந்த போது, மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோ வில் இருந்த நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொமந்த புரத்தைச் சேர்ந்த சிவா (19), வீரமணி (21) ஆகியோரை கைது செய்து, திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை பறி முதல் செய்தனர். விரைவாக குற்றவாளிகளை கைது செய்து பொருட் களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கவுதம் கோயல் பாராட்டினார்.

சங்கிலி திருடி தப்பியவர் சிக்கினார்

அருப்புக்கோட்டை, ஜூலை 15- அருப்புக்கோட்டையில் நகைக் கடையில் தங்கச் சங்கிலியை வாங்குவது போல் நடித்து எடுத்துக் கொண்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீ சாரிடம் ஒப்படைத்தனர். சத்தியமூர்த்தி பஜார் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு வந்த கண்ணதாசன், நகைகளைப் பார்ப்பதாகக் கூறி 2 தங்கச் சங்கிலிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடி னார். கடை உரிமையாளரின் மனைவி காயத்ரிதேவி கூச்ச லிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் விரட்டிப் பிடித்து அவரை அருப்புக்கோட்டை நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேற்றில் சிக்கிய 4 பசுமாடுகள் மீட்பு

சிவகாசி, ஜூலை 14- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சேற்றில் சிக்கிய 4 பசுமாடுகளை தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பரசுராமின் பசுமாடு கள் மேய்ச்சலுக்குச் சென்றபோது, பேர்நாயக்கன்பட்டி பகு தியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டு 4 மாடுகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.