தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

11 Jul 2026, 8:50 pm
திருச்சி விரைவு செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் ஒருவர் கைது

திருச்சுழி, ஜூலை 11- திருச்சுழி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஐந்து வயது மகளு டன் வசித்து வசிக்கின்றனர். தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார். வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தா ராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த கமுதி யைச் சேர்ந்த கார்த்திக்குமார் (21) என்பவர் சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, சிறுமியின் தாய் பரளச்சி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

திருவில்லிபுத்தூர், ஜூலை 11- திருவில்லிபுத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த லட்சுமி, தனது 2 மகள் களுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது குழந்தை யின் சத்தம் கேட்டு சென்ற லட்சுமியிடம், அதே ஊரைச் சேர்ந்த புளு கருப்பன் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது, தனது முதுகை பாலியல் நோக்கத்துடன் தடவியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 181 உதவி எண்ணுக்கு தகவல் அளித்த லட்சுமி, திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், புளு கருப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் டெண்டர் முறைகேடு புகார்: முதல்வருக்கு கவுன்சிலர் மனு

திருவில்லிபுத்தூர், ஜூலை 11- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர் விநியோக டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 61-வது தீர்மா னத்தை ரத்து செய்ய வேண்டும் என 7-வது வார்டு கவுன்சிலர் ராஜா மான்சிங் முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற சாதா ரண கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பான 61-வது தீர்மானத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, முதல்வர், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், நகராட்சி கள் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிநீர் விநியோக டெண்டரில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 61-வது தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

இராஜபாளையம், ஜூலை 12- இராஜபாளையம் அருகே தண்ணீர் ஏற்றி சென்ற டிராக் டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிராஜ் (45), சொந்த டிராக்டரில் விவசாய நிலங்கள் மற்றும் கட்டு மானப் பணிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். எஸ். ராமலிங்கபுரத்தில் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியபோது, வளைவில் டிராக்டரை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாரிராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கீழ ராஜ குலராமன் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோத னைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாரிராஜுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.27.59 லட்சம் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது

விருதுநகர், ஜூலை 11 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பெயரில் ரூ.27.59 லட்சம் மோசடி செய் ததாக தனியார் நிதி நிறு வன மேலாளர் ஒருவரை விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விருதுநகரில் செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய மதுரை மாவட் டம் தும்பக்குளத்தைச் சேர்ந்த பகவதி தெய்வம் (36), மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, 65 பேரின் பெய ரில் போலியாக கடன் பெற்று ரூ.27.59 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. நிறுவனத்திற்கு சந்தே கம் வராமல் இருக்க, கட னுக்கான வாராந்திர தவ ணைத் தொகையை அவரே சுமார் இரண்டு ஆண்டு செலுத்தி வந்ததாகவும், பின்னர் கடந்த மே மாதம் பணிக்கு வராததைத் தொட ர்ந்து நடைபெற்ற கணக்காய் வில் மோசடி வெளிச்சத் துக்கு வந்ததாகவும் போலீ சார் தெரிவித்தனர். நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார், பகவதி தெய் வத்தை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

விதிமுறைகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

விருதுநகர், ஜூலை 11- விருதுநகர் மாவட்டத் தில் விதிமுறைகளை மீறி உற்பத்தியில் ஈடுபட்ட 12 பட்டாசு ஆலைகளின் உரி மத்தை தற்காலிகமாக ரத்து செய்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத் தின் பிரதான தொழிலாக இருப்பது பட்டாசுத் தொழில். இங்குள்ள சுமார் 1200 பட் டாசு ஆலைகள் சுமார் 5 லட் சம் தொழிலாளர்கள் நேரடி யாகவும், 3 லட்சம் பேர் மறை முகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதேவேளை விதிமுறை மீறல் காரணமாக பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற் படுவதும், அதில் மனித உயிர் கள் பலியாவதும் தொடர்கி றது. இந்நிலையில் வெடி விபத்துகளைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் உள்ளதா என தொழிலக பாதுகாப்பு, சுகா தார இயக்ககத்தின் சார்பில் 6 குழுக்கள் மாவட்டம் முழு வதும் உள்ள பட்டாசு ஆலை களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றன. கடந்த 30 நாட்களில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்தனர். அதில், சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 82 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளன. அதிக அளவி லான விதிமீறல்கள் கண்ட றியப்பட்ட 12 பட்டாசு ஆலை களின் உரிமம் தற்காலிக மாக ரத்து செய்தும் நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை களில் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும், விதி மீறல்கள் கண்டறியப்பட் டால் உரிமம் ரத்து செய்யப் படும் எனவும் அரசு அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

திடீரென ரகத்தை மாற்றுவதால் 10,000 கைத்தறி நெசவாளர்கள் வேலையிழப்பு

விருதுநகர், ஜூலை 11- விருதுநகர் மாவட்டத்தில் வேலை யிழந்து தவிக்கும் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பிரச்சனைக்கு உடனடியாக தமிழக அரசு தீர்வுகாண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர், ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சேத்தூர், திருவில்லி புத்தூர், சுந்தரபாண்டியம், புனல்வேலி, முத்துச்சாமியாபுரம் ஆகிய பகுதிகளில் 29 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் 10 ஆயிரம் நெச வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். காலங்காலமாக ஜனதா ரக சேலையை உற்பத்தி செய்து வந்தனர். இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தவெக அரசு, அந்த ரகத்தை தற்போது மாற்றுவ தாக அறிவித்துள்ளது. இதனால் நெசவு தறியில் அனைத்திலும் அச்சு மற்றும் உதிரி பாகங்களை மாற்றம் செய்ய வேண்டியுள் ளது. ஒவ்வொரு தறிக்கும் ரூ.10ஆயிரம் வரை செலவாகும் நிலை உள்ளது. மேலும், பாவு புனைபவர்கள், பசை போடுபவர், நூல் சுற்றுவோர் என சுமார் 1000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், பழைய முறைப்படி ஜனதா ரக சேலைக்கான நூலை வழங்கக் கோரி நெசவாளர்கள் கடந்த சில தினங்க ளாக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு, புதிய ரக சேலை உற்பத்தி செய்யும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான அடிப்படையான கட்டமைப்புகளை ஏற் படுத்த வேண்டும். அதுவரை வேலை யிழந்து தவிக்கும் நெசவாளர்களுக்கு உட னடியாக நூல் வழங்கி வேலையை துவக் கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

திடீரென உயர்த்தப்பட்ட தனியார் பேருந்து கட்டணம் ரத்து செய்யக் கோரி சிபிஎம் கோரிக்கை

விருதுநகர், ஜூலை 11- விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித அறி விப்புமின்றி தனியார் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இராஜ பாளையம் -விருதுநகர், இராஜபாளையம்-மதுரை, திருவில்லிபுத்தூர்-விருதுநகர், மதுரை-தென்காசி செல்லும் தனியார் பேருந்துகளில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் திடீரென ரூ.5 வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்புகள் ஏதும் வெளி யிடவில்லை. அரசின் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்து வரு கின்றனர். இதுகுறித்து பேருந்து நடத்துநரிடம் கேட்டால், மதுரை-செங்கோட்டை சாலை யில் நத்தம்பட்டி அருகே சுங்கச்சாவடி கட்ட ணம் வாகனங்களுக்கு வசூல் செய்யப்படு கிறது. எனவே, கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த சுங்கச் சாவடியே விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள் ளது. அதை காரணம் காட்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதையும் ஏற்க முடியாது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி யாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை ரத்து செய்வதோடு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது.

75 பவுன் நகைகள் கொள்ளையடித்த வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய 4 பேர் கைது

சிவகாசி, ஜூலை 11- சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் ராம். இவர் வீட்டிற் குள் கடந்த 5ஆம் தேதி முகமூடி அணிந்த 4 பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே இருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மக் கும்பல் கொள்ளையடித்தது. இதை தடுக்க முயன்ற அரவிந்த் ராம் மற்றும் அவ ரது மனைவியை வாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். பின்பு காரில் ஏறித் தப்பியது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர் பாக மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு நடத்தினார். இதைத் தொட ர்ந்து சிவகாசி டி.எஸ்.பி அனில்குமார் தலை மையில் 7 தனிப்படைகள் அமைத்து கொள் ளையர்களை தீவிரமாக தேடி வரு கின்றனர். இந்நிலையில், கொள்ளையர்கள் பயன் படுத்திய கார் நம்பர் மற்றும் கொள்ளை நடை பெற்ற இடத்தில் இருந்த செல்போன் சிக் னலை வைத்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையடித்த நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தூத்துக்குடி ஆசீர்வாதம் நகர் 5வது தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார் (24), பிரித்திவிராஜன் (28), அண்ணாநகர் சோமசுந்தரம்(24), டிஎம்பி காலனி பேச்சிமுத்து (21) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் ஓரிரு நாட்க ளில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இராஜபாளையத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

இராஜபாளையம், ஜூலை 11- இராஜபாளையத்தில் தெருநாய்கள் அதி கரித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா அறிவுறுத்தலின்பேரில், கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் டாக்டர் மாஸ்கோமலர் தலைமையில், இராஜபாளையம் நகராட்சி சுகாதாரத் துறை யுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு, சொக்கர் கோவில் தெரு, மதுரை ராஜா கடை தெரு, ஜவ ஹர் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்து வர் டாக்டர் ரகுராமன் வெறிநோய் தடுப்பூசி செலுத்தி னார். இந்தப் பணியில் நகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் பழனிக்குரு, காஜா நஜ்முதீன், சந்திரசேகரன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

ஒட்டன்சத்திரம், ஜூலை 11- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரை கிராமத்திற்கு ஊருக்கு அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வாணிக்கரை ஊராட்சி மன்ற செயலர் உள் ளிட்டோரிடம் பலமுறை புகார் செய்தும் சீரான குடிநீர் வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களு டன் அழகாபுரி - ஈசநத்தம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூம்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சரவணன், சந்தோஷ், தனிப்பிரிவு போலீசார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று உயர் அதிகாரி யிடம் கூறி சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு நட வடிக்கை எடுப்பதாக கூறிய பின்பு மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

லாரி ஓட்டுநரிடம் செல்போன், பணம் பறிப்பு 2 பேர் கைது -ஒருவர் தப்பி ஓட்டம்

தேனி, ஜூலை 11- பெரியகுளம் அருகே ஓய்வில் இருந்த லாரி ஓட்டுநரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த 2 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர் .தப்பியோடிய நபரை தேடி வரு கிறார்கள். கோவை மாவட்டம், சிறுமுகை இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் வனராஜ் (35) இவர் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மில்லில் நூல் கண்டுகளை ஏற்றி கொண்டு, உதவியாளர் சிவா என்பவரு டன் மதுரை மாவட்டம், ஆலங்கொட்டாரத்தில் உள்ள மில்லில் லோடு இறக்கி விட்டு, தேனியில் உள்ள ஒரு மில்லில் லோடு இறக்கி விட்டு கோவை செல்வதற்காக தேனி -திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்த னர். அப்போது பெரியகுளம் அருகே மீனாட்சிபுரம் விலக் கில் ஓய்விற்காக ஓரமாக நிறுத்தியிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வனராஜ் வைத்திருந்த செல் போன் ரூ.1,500ஐ பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக வனராஜ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் பிரகாஷ் பாண்டி (25), ஊத்துப்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன் மகன் பாலமுருகன் (23) ஆகியோரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த தவசி மகன் ராஜ்குமார் (27) என்பவரை தேடி வருகிறார்கள்.

தேனி அருகே பிடிபட்ட கஞ்சா: சிறார் உட்பட 2 பேர் கைது

தேனி, ஜூலை 11- தேனி அருகே அன்னஞ்சி பகுதியில் காவல்துறை யினர் நடத்திய சோதனையில் 1.300 கிலோ கஞ்சா சிக்கி யது. இதுதொடர்பாக சிறார் உட்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, அன் னஞ்சி பகுதியில் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த இருவரை சோதனை செய்தனர். அப்போது கட்டைப்பை யில் 1.300 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் கம்பம் மெட்டு காலனி கோவில் வாசல் தெருவைச் சேர்ந்த பலகுரு (21), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறார் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மட்டப்பாறையில் 5 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் வனத்துறைக்கு விவசாயிகள் சங்கம்

கண்டனம் சின்னாளப்பட்டி, ஜூலை 12- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப் பாறை பகுதியில் கடந்த 5 நாட்களாக சிறுத்தை சுற்றித் திரி வதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தாதம்பட்டி மற்றும் மட்டப்பாறை கண்மாய் பகுதி களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்த தையடுத்து வனத்துறையினர் டிரோன் மூலம் தேடுதல் நடத்தினர். ஆனால் சிறுத்தை சிக்காததால், மீண்டும் தென் பட்டால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அறி வுறுத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண்குமார் என்பவர் தனது தோட்டத் தில் சிறுத்தையை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்ததாக வும், அந்த புகைப்படத்தில் சிறுத்தை மிகவும் மெலிந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் காசிமாயன் கூறுகையில், “கடந்த 5 நாட்க ளாக தகவல் அளித்தும் வனத்துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

முதியவர் சடலமாக மீட்பு

திருவில்லிபுத்தூர், ஜூலை 11- விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, வா.புதுப்பட்டி தெற்கே அழகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள தனியார் தோப்பில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூலை 8 ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர், 2 நாட்களாக வீடு திரும்பாததால் அவரது மகன் மாரீஸ்வரன் தேடிச் சென்றார். அப்போது, தோப்பில் மருதுபாண்டி உடல் வீங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாகவும், அருகில் காலி மதுபாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை யடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான மடத்தின் நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

பழனி, ஜூலை 11- பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள மட நிலம் சட்டவிரோதமாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்து, முறைகேடான பதிவை ரத்து செய்ய வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் பழனி நகரச் செய லாளரும், நகர்மன்ற துணைத் தலைவரு மான கே.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பழனியில் முருகன் கோவில் மலையடி வாரத்தில் தற்போது இலவச வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இந்த நிலம் ஒரு ஏக்கர் 40 சென்ட் ஆகும். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலம் பாலசமுத்தி ரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியகாரர் என்பவரால் தண்டபாணி சாமி கோவிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளை பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட் டுள்ளது. இந்த இடத்தை யாரும் உரிமை கோர முடியாது. இந்த இடத்தை பாதுகாக்கும் விதமாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலத்தை கையகப்படுத்தி பக்தர்கள் தங் கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு தக்காராக பழனி இணை ஆணை யரே இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இந்த இடம் தற்போது தனி நபர்கள் 2 பேர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட் டுள்ளது. பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான நிலையில், அந்த பணி யிடத்திற்கு வந்த இணை சார்பதிவாளர் எவ்வித ஆவணங்களையும் சரிபார்க்காமல் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாக கடந்த 6.7.2026 அன்று பத்திரம் பதிந்துள் ளதாக கூறப்படுகிறது. இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும். மேலும் பத்திரம் பதிவு செய்த வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய இரு நபர்கள் மற்றும் இணை சார்பதிவாளர் ஆகி யோர் கைது செய்யப்பட்டு கிரிமினல் நட வடிக்கைக்கு உட்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

“தமிழ்நாடு நாள்விழா” கொண்டாட்டம் மாணவர்களுக்கு கட்டுரை -பேச்சு போட்டிகள்

தேனி, ஜூலை 11- தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக ஆண்டுதோறும் சூலை 18-இல் ”தமிழ்நாடு நாள்விழா” கொண்டாடப்படுவதை முன் னிட்டு மாணவ -மாணவியர்களுக்கு கட்டுரை -பேச்சு போட்டி கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் 2026-27ஆம் ஆண்டில் ஜூலை 18இல் கொண்டாடப் பெறவுள்ள தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வருகின்ற 15.7.2026 அன்று காலை 9.30 மணி முதல் பெரிய குளம் வட்டம், லட்சுமிபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் (ஒருங்கி ணைந்த மாவட்ட நீதிமன்றம் எதிரில்) நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு “தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை” எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டி யும், 1) நான் விரும்பும் தமிழ்நாடு 2)அன்றைய மெட்ராஸ் மாகா ணம் இன்றைய நவீன தமிழ்நாடு 3)இளைஞர்களின் பார்வை யில் தமிழ்நாடு 4)கல்வியில் சிறந்த தமிழ்நாடு 5)வீரம் செறிந்த தமிழ்நாடு எனும் தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளது. கலந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், தலைமை யாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட அளவி லான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள லாம். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்படும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.