தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

4 Oct 2026, 8:53 pm
திருச்சி விரைவு செய்திகள்

காந்தி ஜெயந்திவிடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், அக்.4-காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்திய 65 கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டம், 1958-ன் படி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தேசிய விடுமுறை தினங்களில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல் லது மாற்று விடுமுறை வழங்க வேண்டும். தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும்போது, அவர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று, சிறப்பு விடுமுறை தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந் தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், உரிய படிவங்களை வழங்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 34 கடை

கள், 30 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 65 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு

கிறது எனத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாரத்தான் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.4-ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாரத்தான் போட்டிநடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.8 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இப்போட்டியை சிவந்திப்பட்டி நாடார் பள்ளிகளின் தலைவர் செல்லமுத்து நாடார், மம்சாபுரம் காவல்ஆய்வாளர் அமுதவள்ளி, தமிழ்நாடு பாரம் பரிய சித்தா சங்கத் தலைவர் பிரம்மஸ்ரீ கோவிந்தன், மம்சாபுரம் மாரத்தான் கிளப் தலைவர் ராஜாக்கனி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், மதுரைவீரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, பேருந்து நிலையம், தேவர் சிலை, திருவில்லிபுத்தூர் பிரதான சாலை, மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகம், செண்பகத்தோப்பு சாலை,அன்னையன் தோப்பு பண்ணை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழிநெடுகிலும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு அபாயம்

விருதுநகர், அக்.4-விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.விருதுநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றான பழைய சிவகாசி சாலை, கூரைக்குண்டு மற்றும் பாவாலி ஊராட்சிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் தினசரி குப்பை சேகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் சாலையோரங்களிலும், கௌசிகா ஆற்றிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளும் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை அதிகளவில் தேங்கி கிடக்கின்றன.சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே,கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தினசரி வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியை முறையாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கைத்தறித் துறை குழு ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.4-பொங்கல் 2027 இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர், சுந்தரபாண்டியம் பகுதி

களில் கைத்தறித் துறை ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை கைத்தறி இயக்குநர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட உதவி அமலாக்க அலுவலர் கவிதா தலை

மையிலான குழுவினர், சுந்தரபாண்டியம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் வீடுகளுக்குச் சென்று இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பான பணிகளை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் கிடங்கில் நூல் களின் தரத்தை ஆய்வு செய்தனர். பின்னர், கூட்டுறவு சங்கங்களின் ஆட்சியர்கள் மற்றும் மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், பொங்கல் 2027 இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பாக கைத்தறித் துறை ஆய்வுக் குழுவினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.ஆய்வின்போது சரக உதவி இயக்குநர் வே.சேரன், அலுவலகக் கண்காணிப்பாளர்கள் சுதாகர், விஸ் வேஸ்வரன், சரக கைத்தறி ஆய்வாளர்கள் காஜா, மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பனை விதை நடவு

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.4-ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மக்கள் ஆரோக்கியமாக வாழவும், தூய்மையான காற்றைச் சுவாசிக்கவும் நகரம் முழுவதும்மரக்கன்றுகளை நடும் நோக்கில், ‘கிரீன் ஸ்ரீவி’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.பசுமைக் காவலர்கள் காளிராஜ், மாரியப்பன் மற்றும் மக்கள் சேவை மையத்தின் செயல் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழுவைத் தொடங்கினர்.குழுவின் முதல் பணியாக, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கீழராஜகுலராமபேரி கண்மாய்க் கரையில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. வழக்கறிஞர் காமராஜ் வழங்கிய 1,500 பனை விதைகளில் 500-க்கும் மேற்பட்ட விதைகள் பசுமைக் காவலர்களால் நடப்பட்டன.இப்பணியில் பசுமைக் காவலர்கள் மாரியப்பன், காளிராஜ், அத்திகுளம் வெங்கடேஷ், மம்சாபுரம் கோவிந்தராஜ், ராஜபாளையம் ரமேஷ், ஹரி, பிரவீன், வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.

இணை உரங்கள் வாங்க விவசாயிகளை நிர்ப்பந்திக்கக் கூடாது

வேளாண்மைத்துறை எச்சரிக்கை

விருதுநகர், அக்.4-உரம் வாங்க வரும் விவசாயிகளை, உரத்துடன் இணை உரங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குமாறு விற்பனையாளர்கள் நிர்ப்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட வேளாண்மைத் துறை எச்சரித் துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டான்பெட் நிறுவனத்தில் 270 டன் யூரியா, 146 டன் டி.ஏ.பி., 144 டன் பொட்டாஷ், 68 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு உள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்

கங்களில் 700 டன் யூரியா, 478 டன் டி.ஏ.பி.,92 டன் பொட்டாஷ், 129 டன் சூப்பர் பாஸ்பேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்களை கூடுதல் விலைக்கு விற் றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை விற்பனை நிலையங்களில் தகவல் பலகையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும் போது உரிய ரசீது வழங்க வேண்டும்.மேலும், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு விபரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். உரங்களுடன் நானோ யூரியா உள்ளிட்ட இணைப் பொருட் களை விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது. உரிய ஆவணங்களின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.