திருச்சி விரைவு செய்திகள்
20 Jul 2026, 9:59 pm

இந்திரா குடியிருப்பில் கழிப்பறை, சாலை, மயான வசதி கோரி மனு

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகேயுள்ளது செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி. இங்குள்ள இந்திரா குடியிருப்பில் கழிப்பறை, சாலை, மயான மேடை உள் ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் மனு அளித்தனர். அதில், “இந்திரா குடியிருப்பில் அருந்ததியர் சமூக மக்கள் வசித்து வருகிறோம். அங்கு பெண்கள் பயன் படுத்தி வந்த சுகாதார வளாகம் பழுதடைந்து விட்டது. எனவே, புதிய சுகாதார வளாகம் கோரிக்கைக்கு பின்பு, புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இதில் 5 பேர் மட்டுமே பயன்டுத்த முடியும். போதிய வசதி இல்லை. எனவே, சாலை, மயானம், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திடுக! எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி, திருத்தங் கல் எம்ஜிஆர் நகரில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டு மென மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், ‘எங்கள் பகுதியான எம்ஜிஆர் நகரில் சுமார் 100 பழங்குடியின குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பழைய துணி, இரும்பு வாங்கு தல், கேஸ் அடுப்பு பழுது நீக்கம் செய்தல் போன்ற தொழில் களைச் செய்து வருகிறோம். குடிமனைப் பட்டா வழங்கப் படவில்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகள் மற்றும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

ஜூலை 24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 24 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெறும். அதில், விவசாய பெருமக்கள் கலந்து கொள்வது டன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

சத்திரக்குடியில் வாசிப்பு இயக்கம்

இராமநாதபுரம், ஜூலை 20- இராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் தமுஎகச சத்தி ரக்குடி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை வாசிப்பு இயக்கம் மாவட்டத் துணைத் தலைவர் மோகன் தலைமை யில் நடைபெற்றது. சத்திரக்குடி கிளைச் செயலாளர் த.முத்துலட்சுமி வர வேற்றார். எழுத்தாளர் ம.காமுத்துரையின் “பண்டம்” நூல் குறித்து விவாதம் நடைபெற்றது. பேரா.ம.அழகு முருகன் நெறியுரையாற்றினார். எழுத்தாளர் ம.காமுத் துரை ஏற்பு உரையாற்றினார்.

தேவகோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு

தேவகோட்டை, ஜூலை 20- தமுஎகச தேவகோட்டை கிளை சார்பில் கலை இலக்கிய இரவு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் அழகப்பா பூங்கா அருகில் நடைபெற்றது. விழாவையொட்டி தேவகோட்டை சிவன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை மா.ஏழுமலை தொடங்கி வைத்தார். பேரணி ராம்நகர் வழியாக பாரதி ராஜா நினைவுத்திடலை வந்தடைந்தது. கிளைச் செயலாளர் சு.ஜீவானந்தம் வரவேற்றார். வர வேற்புக்குழுத் தலைவர் நா.ராம்ஜி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் செ.போஸ் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சூ.அன்பரசன் நோக்கவுரையாற்றினார். சிறுமி மிருதுளா ஸ்ரீயின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வை யாளர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், அரசுப் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் ர.நந்தினி, க.ஹரிப்பிரியா, அ.துர்காதேவி, ச.ஹார்ணி மற்றும் ஆ.லெவின் ஜெயா ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா நன்றி கூறினார்.

அடுத்த குழுக்களின் கடனை செலுத்தச் சொல்லி நிர்ப்பந்தம்: ஆட்சியரிடம் மகளிர் குழுக்கள் புகார்

விருதுநகர், ஜூலை 20- பகுதி அளவிலான கூட்டமைப்பில் இருந்த 3 மகளிர் குழுக்கள் முறையாக கடன்களை திரும்ப செலுத்தாத கார ணத்தைக் கூறி கடன்களை கட்டி முடித்த மீதமுள்ள 7 குழுவினரிடம் பணத்தை கட்ட வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி நிர்ப்பந் தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் வட்டத்திற்கு உட்பட்டது மம்சா புரம். இங்குள்ள 10 மகளிர் குழுக்களை இணைத்து “சிகரம் என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பு“ அமைக்கப்பட்டது. பின்பு, இக்குழுக்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 மகளிர் குழுக்கள் வாங்கிய கட னுக்கு வட்டியுடன் பணத்தை முறையாக ரூ.60 லட்சத்து 30 ஆயிரம் வரை திரும்ப செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 3 குழுக்கள் கடன்களை முறை யாக செலுத்தவில்லையென கூறப்படு கிறது. அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.14 லட்சத்து 46 ஆயிரத்து 700ஐ திரும்ப செலுத்திய 7 குழுக்களிடம் மீதமுள்ள பாக்கித் தொகையை கட்ட வேண்டுமென வங்கி நிர்வாகத்திடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், ஆவேசமடைந்த 7 மகளிர் குழு உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு அளித்தனர். அதில், வாங்கிய கடன்களை முறையாக வட்டியுடன் செலுத்தி வருகிறோம். எனவே, சிகரம் பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 7 மகளிர் குழுக்களை விடுவித்து வங்கி கணக்குகளை முறையாக பராமரித்தால் எங்களது கடன்களை அசலுடன் திருப்பி செலுத்த தயாராக உள்ளோம் என அதில் தெரிவித்துள்ளனர்.