தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்?

31 May 2026, 9:58 pm
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்?

விருதுநகர், மே 31- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கு உரிய விப ரங்களை வழங்காமல், ஒரே மாதிரியான பதில்களை அளித்து வருவதாக விருது நகர் மாவட்ட நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறு வனங்களின் செயல்பாடுகள் குறித்த தக வல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வ தற்காக 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, எந்தவொரு இந்திய குடிமகனும் அரசுத் துறைகளிடம் தக வல்களைக் கோருவதற்கும், அவற்றை பெறு வதற்கும் உரிமை பெற்றுள்ளார்.

மேலும், அரசுத் துறைகளின் செயல்பாடு கள் தொடர்பான தகவல்களை வெளிப்ப டைத்தன்மையுடன் வழங்குவது சம்பந் தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகவும் சட் டம் வலியுறுத்துகிறது.

ஆனால், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எந்தவொரு தகவலை கேட்டாலும், உண்மையான விபரங்களை வழங்காமல் தவிர்க்கும் போக்கு சில அதிகாரிகளிடம் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக, மதுரை மாவட்டம் கோமதிபுரத்தைச் சேர்ந்த என்.

மருதுபாண்டி என்பவர் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இணையவழி மூலம் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் தொடர்பான பல்வேறு விபரங்களை கோரி மனு அளித்திருந்தார். அவரது மனுவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மாவட்டத்தில் எத்தனை பட்டாசு ஆலை களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எத் தனை சில்லறை மற்றும் மொத்த விற்பனை பட்டாசுக் கடைகள் செயல்படுகின்றன, எத் தனை பட்டாசு ஆலைகளுக்கு தடை விதிக் கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது, விதிமுறை களை மீறிய ஆலைகள் எத்தனை, விபத்து களில் உயிரிழந்தோர் மற்றும் காயம டைந்தோர் எண்ணிக்கை, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் வழங்கிய நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், “தக வல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 2(எப்)-ன்படி பதிவுசெய்யப்பட்ட தக வல்களை மட்டுமே வழங்க முடியும்.

யூகத்தின் அடிப்படையிலோ அல்லது கேள்வி வடிவிலோ கோரப்படும் தக வல்களை வழங்க வழிவகை இல்லை” என ஒரே மாதிரியான பதிலை வழங்கியுள்ளனர்.

கேட்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் பதிவு களாக இருப்பதாகவும், அவற்றை வழங்கா மல் தவிர்ப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே பாதிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தகவல்களை வழங்காமல் தவிர்க்கும் நோக்கத்துடன் சில அதிகாரி கள் செயல்படுவதாகவும், இது சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கும் செயலாகும் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப மனுதாரருக்கு தேவையான தக வல்கள் முழுமையாக வழங்கப்படுவதை தமி ழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சட்டப்பிரிவுகளை காரணம் காட்டி தக வல்களை மறுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.