திருச்சி விரைவு செய்திகள்
7 Jun 2026, 10:46 pm

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

திருச்சுழி, ஜூன் 7- திருச்சுழி அருகே செம்பொன் நெறிஞ்சியைச் சேர்ந்த வர் கவிதா (25), இவர் திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். இவரிடம் 2023 இல், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த அனிதா, அவரது கணவர் வீரப்பெருமாள், நூற்பு ஆலை யில் மேலாளராக உள்ள செல்வராஜ் ஆகியோர் ரூ.7 லட்சம் வாங்கியுள்ளனர். 2 மாதங்களில் பணி நியமன ஆணை வந்து விடும் என தெரிவித்தனர். 2 ஆண்டுகள் முடிவடைந்தும் வேலை கிடைக்கவில்லை. எனவே, இதுகுறித்து மூவரிடம் அனிதா கேட்டுள்ளார். ஆனால் பணத்தைத் திரும்பத் தரா மல் மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே, அவர் திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருவில்லிபுத்தூரில் புகையிலை விற்ற பெண் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 7- மம்சாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நரை யன்குளம் பள்ளி அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய ஆய்வாளர் அமுதவல்லிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ப னைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் காளியம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய ஆட்சியர்

திண்டுக்கல், ஜூன் 7- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட தாண்டிக்குடி பகுதியில் உள்ள உட்கடைக் கிரா மமான ஜெ.ஜெ.நகரில் வசித்து வரும் 13 பழங்குடியின குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நீண்டகாலமாக அப்பகுதியில் வசித்து வந்த குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டதால், பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்த னர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) இல.பிரபு, வட்டாட்சியர் நந்தகோபால், கோட்ட கலால் அலுவலர் சு.பாபு உள்ளிட்ட அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர். பழங்குடியின மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை யும், நில உரிமையை உறுதி செய்வதையும் நோக்க மாகக் கொண்டு இந்த பட்டா வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 7- திருவில்லிபுத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருக ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தபோது, மாயாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் சந்தேகத்திற்கி டமான முறையில் இருந்துள்ளார். அவரை சோதனை செய்தபோது, விற்பனைக்காக 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து காளிராஜை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக் குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அஞ்சலகங்களில் பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் விற்பனை தொடக்கம்

விருதுநகர், ஜூன் 7- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்ச லகங்கள் மூலம் பி.எஸ்.என்.எல். சிம் கார்டு கள் மற்றும் ரீசார்ஜ் சேவைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் தலைமை அஞ்சல் அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலக அலுவலர்கள் பிரேமா மற்றும் பால்சாமி ஆகியோர் சிம் கார்டு விற்பனை யை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவ னத்தின் துணைப் பொதுமேலாளர் (பொறி யாளர்) பிரேம் ஷாஜ், உதவிப் பொதுமேலா ளர் விஜய் கிருஷ்ணன், எஸ்.டி.இ. விஜய குமார் மற்றும் ஜே.டி.ஓ. அஷ்ரப் தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் விருதுநகர் தலைமை அஞ் சல் அலுவலகத்தில் பொதுமக்கள் பி.எஸ். என்.எல். சிம் கார்டுகளை வாங்குவதுடன், ரீசார்ஜ் சேவைகளையும் பெற முடியும். மேலும், ஜூன் மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் அருப்புக்கோட்டை, சிவ காசி மற்றும் இராஜபாளையம் ஆகிய பகுதி களில் உள்ள தலைமை அஞ்சல் அலுவல கங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் மூலம் கிரா மப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு பி.எஸ். என்.எல். சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.