சாய்வு தளம் இல்லாததால் நல அலுவலகம் செல்லும் மாற்றுத் திறனாளிகள் அவதி
1 Jun 2026, 10:38 pm
<p><strong>சாய்வு தளம் இல்லாததால் நல அலுவலகம் செல்லும் மாற்றுத் திறனாளிகள் அவதி</strong></p><p>விருதுநகர், ஜூன் 1- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வாயிலில் பட்டிக்கட்டுகள் இருப்பதால் மாற்றுத் திற னாளிகள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய கட்டிடத்தின் தரை தளத்தின் கடைசி அறையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வந்தது. எனவே, அக்கட்டி டத்தின் பின்வாசலில் உள்ள சாய்வு தளம் வழியாக மாற்றுத் திறனாளிகள் அலு வலகத்திற்கு சென்று வந்த னர். இந்நிலையில் 6 மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவல கம் புதிதாக கட்டப்பட்டது. அங்கு பல்வேறு துறைக ளின் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நலத்துறை அலு வலகம், ஏற்கனவே, இருந்த பழைய கட்டிடத்தின் முன் அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பட்டிக்கட்டுகள் மட் டுமே உள்ளன. சாய்வு தளம் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, அலுவ லகத்திற்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதியடைந்து வருகின்ற னர். எனவே, மாற்றுத்திற னாளிகளின் நலன் கருதி சட்டப்படி அப்பகுதியில் சாய்வு தளம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
