தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

8 Jun 2026, 9:39 pm
தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

விருதுநகர், ஜூன் 8- மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்பட்ட இல வச வீட்டுமனைப் பட்டா நிலங்களில் அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று அனை த்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை விடுத் துள்ளது.

இதுதொடர்பாக சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே. நாகராஜ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளி களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பல் வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் விளைவாக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டன. விருதுநகர் அருகே யுள்ள தம்மநாயக்கன்பட்டி, புல்லலக்கோட்டை, ஆமத் தூர் மற்றும் கடம்பன்குளம் பகுதிகளில் மொத்தம் 268 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்பட்டா பெற்ற வர்களில் பெரும்பாலா னோர் பொருளாதார ரீதி யாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் என்பதால், சொந்த செலவில் வீடுகள் கட்டி குடியேற முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, மாற்றுத் திற னாளிகளின் வாழ்வாதார மற்றும் சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவசமாக தொகுப்பு வீடுகள் கட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மாவட்டத் தலைவர் கே.நாகராஜ், மாவட்ட பொருளாளர் கே. ஆரோக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து கோரி க்கை மனுவை வழங்கினர். மாற்றுத் திறனாளி களுக்கான வீட்டு வசதி திட் டங்களை விரைவுபடுத்தி, பட்டா வழங்கப்பட்ட நிலங்க ளில் குடியிருப்புகளை உரு வாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.