குறைதீர் கூட்ட மனுக்களுக்கு அதிக கட்டணம் வசூல்
29 Jun 2026, 11:14 pm
<p><strong>குறைதீர் கூட்ட மனுக்களுக்கு அதிக கட்டணம் வசூல்</strong></p><p>நடவடிக்கை எடுக்க கோரிக்கை விருதுநகர், ஜூன் 29- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களிடம் மனு எழுதித் தருவோர் அதிக கட்டணம் வசூலிப்ப தாக புகார் எழுந்துள்ள நிலையில், இத னைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், இலவச வீட்டு மனைப் பட்டா, குடிநீர், மின்வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பாக மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் பங்கேற்று வருகின்றனர். மனு எழுதத் தெரியாத பலர், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் வெளியே அமர்ந்தி ருக்கும் தனியார் மனு எழுதுவோரை நாடு கின்றனர். ஆனால், அவர்கள் முறையாக மனு எழுதாமல், ஒரு மனுவுக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகை யில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன், கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித் தரும் வசதியை ஏற்படுத்தியிருந்தார். அந்த சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது புதிய ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச மனு எழுதும் மையம் அலுவலகத்தின் உட்புறத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் இருப்பிடம் பலருக்கு தெரி யாததால், பொதுமக்கள் வெளிப்புறத்தில் அமர்ந்திருக்கும் தனியார் மனு எழுதுவோரி டம் சென்று பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலவச மனு எழுதும் மையத்தை ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுப் பகுதியில் அமைத்து, பொது மக்களுக்கு தெளிவான அறிவிப்பு பலகை கள் வைக்க வேண்டும். மேலும், அனுமதி யின்றி பணம் வசூலித்து மனு எழுதும் நபர்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
