வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விருதுநகர் ஆட்சியர் ஆய்வு
26 Dec 2025, 4:32 pm
<p><strong>வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விருதுநகர் ஆட்சியர் ஆய்வு</strong></p>
<p>விருதுநகர், டிச.26- விருதுநகர் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனை த்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும், வாக்காளர்கள் இணைய வழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் அறியலாம். மேலும், இணையத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் ச்சாவடி மையங்களிலும் டிசம்பர் 27,28 மற்றும் 2026 ஜனவரி 3,4 ஆகிய நாட் களில் காலை 10 மணி முதல் மாலை 5. மணி வரை சிறப்பு முகாம்களில் வழங்க லாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
