தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் 1,450 காசநோயாளிகள் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் இலவசப் பரிசோதனை: ஆட்சியர்

8 Oct 2026, 9:32 pm
விருதுநகர் மாவட்டத்தில் 1,450 காசநோயாளிகள் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் இலவசப் பரிசோதனை: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் 1,450 காசநோயாளிகள் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் இலவசப் பரிசோதனை: ஆட்சியர்

விருதுநகர், அக்.8-விருதுநகர் மாவட்டத்தில் 1,450 பேர் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ‘காசநோய் இல்லா இந்தியா இயக்கம்’ தொடக்க விழாவுக்கு தலைமை வகித்த அவர், 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நோக்கில் அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.மேலும், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாக காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, காசநோய் இல்லாத 24 ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், காசநோய் ஒழிப்பு தொடர் பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதாராணி, மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, மருத்துவர் அரவிந்த்பாபு, காசநோய் துணை இயக்குநர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.