அரசுக் காப்பகக் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசுகள் வழங்கிய ஆட்சியர்
5 Nov 2026, 10:51 pm

அரசுக் காப்பகக் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசுகள் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர், நவ.5–தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்று, தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு, வாழ்வில் உயர்ந்த இலக்குகளைநிர்ணயித்து அவற்றை அடையத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் கல்வி சிறந்த தீர்வாக அமையும்.மேலும், அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்காமல், நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும்கடைப்பிடித்து சமூகத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டும் என அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி, ஆசிரியர்கள், காப்பகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.