தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கே.புதூரில் 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

7 Jul 2026, 10:46 pm
கே.புதூரில் 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
<p><strong>கே.புதூரில் 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்</strong></p><p>விருதுநகர், ஜூலை 7- விருதுநகர் அருகேயுள்ள கே.புதூர் கிரா மத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சார்பில் 25 பய னாளிகளுக்கு இணையவழி (இ-பட்டா) பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் வழங்கினார். கே.புதூர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைக்கான அரசு உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இருப்பி னும், அந்த இடங்களுக்கான பட்டாக்கள் வழங்கப்படாததால், நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங் களை அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டார். தொடர்ந்து, அள வீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொட ர்ந்து, பயனாளிகளுக்கு இணையவழி (இ- பட்டா) பட்டாக்களை நேரில் வழங்கினார். பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள் கூறுகையில், “இலவச வீட்டுமனைக்கான அரசு உத்தரவு கிடைத்திருந்தாலும், பட்டா இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தோம். தற்போது நிலங்களை தனித்தனியாக அளவீடு செய்து, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இ-பட்டாக்களை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது” என்ற னர். இந்நிகழ்வில் சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தேவசகாயம், விருதுநகர் வட்டாட்சியர் ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.