தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்விதான் ஏழை எளிய மக்களின் மிகச்சிறந்த வாழ்வாதாரம்! சிஐடியு இலவசப் பயிற்சித் துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி உரை!

31 May 2026, 11:32 pm
கல்விதான் ஏழை எளிய மக்களின் மிகச்சிறந்த வாழ்வாதாரம்! சிஐடியு இலவசப் பயிற்சித் துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி உரை!

கல்விதான் ஏழை எளிய மக்களின் மிகச்சிறந்த வாழ்வாதாரம்! சிஐடியு இலவசப் பயிற்சித் துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி உரை!

விருதுநகர், மே 30- விருதுநகரில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ - மாணவிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் சுகபுத்ரா,“கல்விதான் ஏழை எளிய மக்க ளின் மிகச்சிறந்த வாழ்வாதார ஆயுதம்” எனத் தனது சொந்த வாழ்க்கை அனுப வங்களை முன்வைத்து நெகிழ்ச்சியோடு உரையாற்றினார். இவ்விழாவிற்குச் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி அனைவரையும் வரவேற்றுப் பேச, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா தொடக்கவுரையாற்றினார்.

விவசாயக் குடும்பத்தில் இருந்து ஐஏஎஸ் வரை: ஆட்சியரின் நெகிழ்ச்சிப் பயணம்

போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களிடம் ‘எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது?’ என்ற குழப்பங்கள் நீடிக்கும் சூழலில், அதற்குச் சரியான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் இந்த இலவசப் பயிற்சி முகாமைக் கூட்டி யுள்ள சிஐடியு நிர்வாகிகளுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியை யும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து தனது சொந்த வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது சொந்த மாநிலம் கர்நாடகா என்றும், அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாகக் குறிப்பிட்டார். பள்ளிக் காலத்தில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே, 3 கிலோமீட்டர் தொலை வில் உள்ள முதன்மைக் கிராமத்திற்குச் சென்றுதான் படித்ததாகவும், பட்டப்படிப்பு படிக்கும் வரை தனக்குச் செய்தித்தாள் படிக்கும் வாய்ப்பு கூட இருந்ததில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது கல்விப் பயணத்தில் பல நல்ல உள்ளங்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு உதவித்தொகை வழங்கித் தோள் கொடுத்த தால்தான் இன்று மாவட்ட ஆட்சித் தலைவ ராக உங்கள் முன்னால் நிற்க முடிகிறது என்று குறிப்பிட்ட அவர், முதல் முயற்சியில் தோல்வியுற்றாலும், தொடர்ந்து முயன்று இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை (IRTS) மற்றும் இந்திய வருவாய்த் துறை (IRS) உதவி ஆணையர் ஆகிய பொறுப்பு களில் பணியாற்றியதாகக் கூறினார். அதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து முயன்று 2016ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற தாகக் குறிப்பிட்ட அவர், வாழ்வில் தடைக ளைக் கண்டு தொய்வடையாமல் தொடர்ந்து முயன்றால் நமக்கான அங்கீகாரம் தேடி வரும் என்று மாணவர்களுக்கு ஊக்க மளித்தார்.

விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கான கல்வி முன்முயற்சிகள்

அரசு என்பது எப்போதும் அடித்தட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் ஒரு சமூக நீதி அரசாகச் செயல்பட்டு வருவதாகச் சுட்டிக் காட்டிய ஆட்சியர், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றார். விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் முக்கிய முயற்சிகளை விவரித்த அவர், நமது மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களி டையே நிலவும் கல்வி இடைவெளியைக் குறைக்க, சுமார் 1,600 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ‘நீட்’ (NEET) மற்றும் ‘ஜேஇஇ’ (JEE) தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் மாதத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு 79 மாணவர்களுக்கு 15 நாட்கள் தீவிர ‘ஜேஇஇ’ பயிற்சி அளித்ததில், 11 மாணவர் கள் ‘ஜேஇஇ மெயின்ஸ்’ தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்பொழுது ‘ஜேஇஇ அட்வான்ஸ்’ தேர்வு எழுதியுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு ஒன்றி யங்களில் இருந்து 600 திறமையான மாண வர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தங்கும் வசதி, தரமான உணவு, யோகா மற்றும் கல்வி வழிகாட்டுதல்களுடன் நீட் தேர்வுக் கான பயிற்சிகளை வழங்கியதாகக் கூறினார். அந்த மாணவர்களின் கண்களில் தெரிந்த தன்னம்பிக்கையும், அவர்களின் பெற்றோரின் நெகிழ்ச்சியான வார்த்தைகளும்தான் தங்க ளைப் போன்ற அதிகாரிகளுக்குப் பணி செய்வதற்கான ஆகச்சிறந்த ஊக்கமாகும் என்றார். வாய்ப்புகள் சரியாக வழங்கப் படும் போது, தனியார் பள்ளி மாணவர்க ளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்க ளும் மிகச்சிறந்த ஆளுமையை வெளிப் படுத்துகிறார்கள் என்பதைப் புத்தகத் திரு விழாப் போட்டிகளில் பார்க்க முடிந்ததாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பட்டாசுத் தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் மாணவர்களுக்கான ஆலோசனைகள்

விருதுநகர் மாவட்டத்தின் பிரதானத் தொழி லான பட்டாசுத் தொழிலில் எதிர்பாராத வித மாக விபத்துகள் நடக்கும் போது உயிரிழப்பு கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என்று கவலை தெரிவித்த ஆட்சியர், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களையும், அவர்களின் குழந்தை களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்ப தற்காகப் பிரத்யேகமாக ‘பாதிக்கப்பட்டோர் நலச் சங்கம்’ (Victims Welfare Society) என்ற அமைப்பினைப் பதிவு செய்யத் திட்ட மிட்டுள்ளோம் என்றார். இதற்குப் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்பைப் பெற்று, தகுந்த வாழ்வாதார உதவிகளை வழங்க உள்ளதாகவும், இதற்குத் தொழிற்சங்கங்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து போட்டித் தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங் கிய அவர், தாழ்வு மனப்பான்மை மற்றும் நேர்காணல் குறித்த பயத்தைக் கைவிட வேண்டும் என்றும், பட்டப்படிப்பு முடித்த எவராலும் எந்தவொரு அரசுப் போட்டித் தேர்வையும் எளிதாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கை முதலில் உங்களுக்குள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வெறு மனே புத்தகங்களை மனப்பாடம் செய்யா மல், பாடத்திட்டத்தையும், கடந்த 10 ஆண்டு களின் முந்தைய வினாத்தாள்களையும் ஆழ மாகப் பகுப்பாய்வு செய்து திட்டமிட்டுப் படித்தால் முதல் முயற்சியிலேயே வெல்ல லாம் என்று வழிகாட்டினார். இங்குள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை முழுமை யாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், தேவைப்படின் மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் உங்களு க்குத் தேவையான சிறப்பு வழிகாட்டு தல்களை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். முன்னதாக, போட்டித் தேர்வர்கள் அனை வருக்கும் ஆட்சியர் “அட்லஸ்” புத்தகங்க ளை வழங்கினார். நிகழ்வின் நிறைவில் டேவிட் நன்றி கூறினார். இதில் பயிற்சி ஆசிரியர்கள் ரவீந்திரன், குருசாமி, சந்திரராஜன், முத்துராஜ், செல்வகணேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போட்டித் தேர்வர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.