தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.37,959 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு திட்ட அறிக்கையை வெளியிட்டார் ஆட்சியர்

11 Aug 2026, 10:01 pm
ரூ.37,959 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு திட்ட அறிக்கையை வெளியிட்டார் ஆட்சியர்

ரூ.37,959 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு திட்ட அறிக்கையை வெளியிட்டார் ஆட்சியர்

விருதுநகர், ஆக.11-விருதுநகர் மாவட்டத் தில் 2026-27 ஆம் நிதியாண் டில் ரூ.37,959.06 கோடி வங் கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராதெரிவித்தார்.

இதற்கான கடன் திட்ட அறிக்கையை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் நபார்டு வங்கியுடன் இணைந்து, ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையா

கக் கொண்டு 2026-27 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது.

இதில் முன்னுரிமைக் கடன்களாக வேளாண் மைக்கு ரூ.16,648 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு ரூ.7,850 கோடி, ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு ரூ.7 கோடி, கல்விக் கடனுக்கு ரூ.41 கோடி, வீட்டு வசதிக் கடனுக்கு ரூ.319 கோடி, சமூகக் கட்டமைப்புக்கு ரூ.4 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.5 கோடி, இதர கடன்களுக்கு ரூ.482 கோடி என மொத்தம் ரூ.25,356 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பிற கடன் களுக்கு ரூ.12,603 கோடி எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் மொத்தம் ரூ.37,959.06 கோடி கடன் வழங்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.54 சதவீதம் அதிகமாகும்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.