தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அணுகுசாலையில் தேய்ந்து போன பேவர் பிளாக் கற்களால் விபத்து அபாயம்

12 Jul 2026, 11:54 pm
அணுகுசாலையில் தேய்ந்து போன பேவர் பிளாக் கற்களால் விபத்து அபாயம்

அணுகுசாலையில் தேய்ந்து போன பேவர் பிளாக் கற்களால் விபத்து அபாயம்

புதிய சாலை அமைக்க கோரிக்கை

விருதுநகர், ஜூலை 12- விருதுநகர் அருகே உள்ள அணுகு சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக் கப்பட்டு பல ஆண்டு ஆகியதால் அவை தேய்ந்துள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை-சாத்தூர் 4 வழிச்சாலை நடுவே வடமலைக் குறிச்சி விலக்கின் எதிர்புறம் விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குச் செல்வதற்கான அணுகு சாலை துவங்குகிறது. அந்த அணுகுசாலை தார் சாலையாக துவங்கி சிவகாசி செல்வ தற்கான மேம்பாலம் துவங்கும் இடத்தின் அருகே பேவர் பிளாக் கற்கள் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டு ஆகி விட்டது. நாள்தோறும் ஏராளமான வாக னங்கள் தொடர்ந்து செல்வதால் பேவர் பிளாக் கற்கள் தேய்ந்து விட்டன. இத னால் இரு கற்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்துள்ளன. இதனால் இச்சாலையில் மழைக் காலங்களில் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், விபத்து கள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக விருதுநகர் அணுகுசாலை யில் தேய்ந்து போன பேவர் பிளாக் கற்களை அகற்றி விட்டு, அங்கு புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.