முந்தய பக்கம்

1507 அங்கன்வாடிகளில் சீருடை, புத்தகங்கள் தயார்

3 Jun 2026, 10:15 pm
1507 அங்கன்வாடிகளில் சீருடை, புத்தகங்கள் தயார்

1507 அங்கன்வாடிகளில் சீருடை, புத்தகங்கள் தயார்

விருதுநகர் ஆட்சியர் தகவல் விருதுநகர், ஜூன் 3- விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,427 முதன்மை அங்கன்வாடி மையங்க ளும், 77 குறு அங்கன்வாடி மையங்களும் என மொத்தம் 1,504 அங்கன்வாடி மையங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட அவர் அப்போது கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து அனைத்து அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து பயிலும் 2 முதல் 5 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் தலா 2 செட் வீதம் புதிய சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் செயல்திறன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்கா ணிக்க வயது வாரியான செயல்பாட்டுப் புத்தகங்கள், விபரத்தொகுப்பு, ஆய்வு அட்டைகள் மற்றும் முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் ஆகியவையும் அனைத்து மையங்களுக்கும் விநியோ கிக்கப்பட்டுள்ளன. தினசரி காலை குழந்தைகளுக்கு 50 கிராம் அளவிலான கொழுக்கட்டை அல் லது இணை உணவு உருண்டை, மதியம் சூடான சமைத்த கலவை சாதம் வழங்கப்படு கிறது. வாரத்தில் 3 நாட்கள் முட்டை, செவ் வாய்க்கிழமை பாசிப்பயறு, வெள்ளிக் கிழமை உருளைக்கிழங்கு மற்றும் 1 நாள் கொண்டைக்கடலை (சுண்டல்) ஆகியவை மதிய உணவுடன் சேர்த்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram