விருதுநகர் அணுகு சாலையோரங்களில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள், குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு
17 Jul 2026, 9:41 pm
<p><strong>விருதுநகர் அணுகு சாலையோரங்களில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள், குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு</strong></p><p>விருதுநகர், ஜூலை 17- விருதுநகரில் நான்கு வழிச் சாலை யின் அணுகு சாலையோரங்களில் தொடர்ந்து கோழிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச் சாலையில் வடமலைக்குறிச்சி விலக்கின் எதிர்புறம் அணுகுசாலை துவங்குகிறது. இச்சாலையைக் கடந்தே சிவகாசி, திரு வில்லிபுத்தூர், விருதுநகருக்குள் வாகனங் கள் செல்ல முடியும். இந்நிலையில், அணுகுசாலையின் ஓரத்தில் நாள்தோறும் ஏராளமான கோழிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் கார ணமாக, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தெரு நாய்கள், இக்கோ ழிக் கழிவுகளை கடித்துக் குதறி சாலையின் நடுவே வீசிச் செல்கின்றன. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு அங்கு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடை பயிற்சி மேற்கொள்வோர் அப்பகுதியை கடக்கவே அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட சுகாதாரத்துறையினர், இப்பகுதியில் கோழிக் கழிவுகள், குப்பை கள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கழி வுகளை கொட்டும் நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும் பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
