நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் ஆத்துமேடு பகுதிக்கு பட்டா வழங்க தாமதம் நடவடிக்கையை விரைவுபடுத்த விருதுநகர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
11 May 2026, 11:38 pm

நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் ஆத்துமேடு பகுதிக்கு பட்டா வழங்க தாமதம் நடவடிக்கையை விரைவுபடுத்த விருதுநகர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை

விருதுநகர், மே 11- விருதுநகர் நகராட்சி 35 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆத்துமேடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் விருதுநகர் நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் மக்கள் கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக வீடுகள் கட்டி குடும்பத்து டன் வசித்து வருகின்றனர்.

ஆனால், இக்குடியிருப்புகள் அமைந் துள்ள பகுதி நகராட்சி வரைபடத்தில் “வழித் தடம்” என தவறாக பதிவு செய்யப்பட்டி ருப்பதால், அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சாத்தூர் கோட்டாட்சியர் மனு தாரர்களிடம் நேரடி விசாரணை நடத்தி னார்.

அதன் பின்னர், விருதுநகர் நகராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு அனுப்பினால், ஆத்து மேடு பகுதிக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2025 டிசம்பர் 31 ஆம் தேதி விருதுநகர் நகராட்சியில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி ஆணையாளர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நீண்டகாலமாக பட்டா இன்றி அவதிப்பட்டு வரும் ஆத்துமேடு பகுதி மக்க ளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் மற்றும் மாதர் சங்க நிர்வாகி ஸ்டெல்லாமேரி ஆகியோர் மனுவை வழங்கினர்.