தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகரில் 36 காவல் சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம்

5 Jun 2026, 1:42 am
விருதுநகரில் 36 காவல் சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம்

விருதுநகரில் 36 காவல் சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம்

விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 36 காவல் சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய குருநாதன் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கும், சூலக்க ரையில் பணியாற்றிய லதா குமாரி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருத்தங்கல்லில் பணியாற்றிய அருண்குமார் சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சூலக்கரையில் பணியாற்றிய சதீஷ்குமார் ஆமத்தூர் காவல் நிலை யத்திற்கும், சாத்தூர் நகரில் பணியாற்றிய அண்ணாத்துரை மற்றும் தனிப்பிரிவில் பணி யாற்றிய அசன்மைதீன் ஆகியோர் சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருத்தங்கல்லில் பணியாற்றிய லோகி தாசன் விருதுநகர் பஜார் காவல் நிலை யத்திற்கும், விருதுநகர் மேற்கில் பணி யாற்றிய திருமலைக்குமார் எம். ரெட்டியபட்டி காவல்நிலையத்திற்கும், காரியாபட்டி யில் பணியாற்றிய அழகர்சாமி அப்பைய நாயக்கன்பட்டி காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வச்சக்காரப்பட்டியில் பணியாற்றிய பாண்டி யராஜன் சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கும், சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் பணி யாற்றிய ராஜகுமார் திருத்தங்கல் காவல்நிலை யத்திற்கும், ராமர் சூலக்கரை காவல் நிலை யத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கூமாப்பட்டியில் பணியாற்றிய செல்வராஜ் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்திற்கும், காரியா பட்டியில் பணியாற்றிய கனகராஜ் திருவில்லி புத்தூர் நகர் காவல் நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை நகரில் பணியாற்றிய விஜய குமார் விருதுநகர் மேற்கு காவல் நிலை யத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இருக்கன்குடியில் பணியாற்றிய பி. கார்த்திக் காரியாபட்டி காவல் நிலையத்திற்கும், விருதுநகர் கிழக்கில் பணியாற்றிய ஜெய கோபி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், சாத்தூர் தாலுகாவில் பணியாற்றிய மகேஸ்வ ரன் திருச்சுழி காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அ.முக்குளத்தில் பணியாற்றிய அழகுமாரி யப்பன், விருதுநகர் மேற்கில் பணியாற்றிய அமுதா மற்றும் பந்தல்குடியில் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் ஆகியோர் திருவில்லி புத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை நகரில் பணியாற்றிய முத்துமாரியப்பன் திருத்தங்கல் காவல் நிலை யத்திற்கும், கூமாப்பட்டியில் பணியாற்றிய செண்பகவேலன் பரளச்சி காவல் நிலை யத்திற்கும், கட்டனூரில் பணியாற்றிய ராஜ பாண்டி சேத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய பால சுப்பிரமணியன் பந்தல்குடி காவல் நிலை யத்திற்கும், சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணி யாற்றிய எஸ்.கார்த்திகா வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்திற்கும், பந்தல்குடியில் பணி யாற்றிய வீரணன் விருதுநகர் ஊரக காவல்நிலை யத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டையில் பணியாற்றிய முருகேஸ்வரன் சிவகாசி கிழக்கு காவல் நிலை யத்திற்கும், எம்.புதுப்பட்டியில் பணி யாற்றிய குருகணேஷ் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கும், சேத்தூர் ஊரக காவல்நிலை யத்தில் பணியாற்றிய ஜோதி வெம்பக்கோட்டை காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருத்தங்கல்லில் பணியாற்றிய பிரகாஷ் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கும், மம்சாபுரத்தில் பணியாற்றிய அருண்பாண்டி யன் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலை யத்திற்கும், தனிப்பிரிவில் பணியாற்றிய பெரிய தாய் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய ராஜேஸ்வரி மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கும், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நவமணி குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.