இராமநாதபுரம், மே 8- பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 6709 மாணவர்களும், 7323
9 May 2026, 12:46 am
<p><strong>இராமநாதபுரம், மே 8- பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 6709 மாணவர்களும், 7323</strong></p><p>விருதுநகர், மே 8- பிளஸ்-2 பொதுத் தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த 9731மாணவர்களும், 11599 மாணவியர்கள் என மொத்தம் 21,330 மாணாக்கர்கள் எழுதினர். மே 8 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 9297 மாணவர்களும், 11430 மாணவியர்களும் மொத்தம் 20727 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.17 ஆகும். தேர்ச்சி சதவீதத்தில் இவ்வருடம் 9ஆவது மாவட்டமாக விருதுநகர் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டமானது, பிளஸ் 2 தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடம் பெற்று தொடர் சாதனை நிகழ்த்தி வந்தது. இடையில் இரு ஆண்டுகள் மட்டுமே பிற மாவட்டங்கள் முதலிடம் பெற்றன. பின்னர் 2017 இல் மீண்டும் விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு மாநில அளவில் 2ஆம் இடத்தை பிடித்தது. அதன் தேர்ச்சி விகிதம் 97.27 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் 2023ஆம் ஆண்டு 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மீண்டும் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில், 2024 இல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 96.64 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2025 இல் அதே தேர்ச்சி விகிதத்தை பெற்று மாநில அளவில் 7 ஆவது இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இந்நிலையில் நிகழாண்டு 97.17 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.53 விழுக்காடு அதிகமாகும். ஆனால், மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 9 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.</p>
