குடிநீர் வழங்க கோரி விரிஞ்சிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>குடிநீர் வழங்க கோரி விரிஞ்சிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்</strong></p>
<p>வேலூர், பிப். 20 - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், விரிஞ்சிபுரம் ஊராட்சி, விரிஞ்சிபுரம் ஜாப்ரா பேட்டை பிள்ளையார் கோயில் தெரு, பொன்னி யம்மன் கோவில் தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க கோரி விரிஞ்சிபுரம்-வடுகன் தாங்கல் செல்லும் சாலை யில் மசூதி அருகே பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் கிலோ மீட்டர் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி போக்கு வரத்து நெரிசலை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவிய சூழலில் நிலைமை சீரானது.</p>
