முந்தய பக்கம்

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

17 Jun 2026, 1:34 pm
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.விஜயபாஸ்கர், நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், சி. விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, அதி​முக எம்.எல்.ஏ-களாக இருந்த மரகதம் குமரவேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகியோர் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram