விஐபி நிறுவனத்தின் புதிய பயண தொகுப்பு
5 Jun 2026, 11:36 pm
<p><strong>விஐபி நிறுவனத்தின் புதிய பயண தொகுப்பு </strong></p><p>சென்னை, ஜூன் 5- இந்தியாவின் முன்னணி லக்கேஜ் தயாரிப்பு நிறுவனமான வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், நவீன இந்தியப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘டிராவல் வி.ஐ.பி’ எனும் புதிய பயணப் பை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொகுப்பில் கிளாசிக் , ஃபிளெக்ஸ் மற்றும் பாட் ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இவை சமகால அழகியல், மேம்பட்ட செயல்திறன் மற்றும் துல்லியமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் தயாரிப்புகள், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் நேர்த்தியான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய வி.ஐ.பி நிர்வாக இயக்குநர் அதுல் ஜெயின், நவீன பயணிகளின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, தரம் மற்றும் செயல்திறனை ஒருங்கிணைத்து இந்த புதிய வரிசை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p>
