ஒன்றிய அரசை கண்டித்து விதொச பிரச்சாரம்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து விதொச பிரச்சாரம்</strong></p>
<p>கும்பகோணம், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம், திருப்புறம்பியம் கிராமத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை மாற்றும் மோடி அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க கும்பகோணம் ஒன்றியத் தலைவர் ஜெ.செந்தில் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் சி. நாகராஜன் தெருமுனை பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பிரச்சாரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் மகேந்திரன் மற்றும் சரவணன் முன்னிலை வகித்தனர். அதேபோல், கும்பகோணம் ஒன்றியத்திற்குட்பட்ட இன்னம்பூரில் விதொச ஒன்றியக் குழு உறுப்பினர் எம். மாசிலாமணி பாபுராஜபுரத்தில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.</p>
