காங்கிரஸ் தலைமையகத்தில் வன்முறை
2 Apr 2026, 5:30 am
<p><strong>காங்கிரஸ் தலைமையகத்தில் வன்முறை</strong></p><p>மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் போராட்டம் நடத்தினர்.</p><p>இந்த போராட்டத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். வெளிநபர்களை வேட்பாளர்களாக அறிவித்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p>
