போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது வன்முறை - மனித உரிமை மீறல்!
18 Feb 2026, 3:04 pm

போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது வன்முறை - மனித உரிமை மீறல்! தமிழக காவல்துறைக்கு சிபிஎம் மாநிலக்குழு கண்டனம்

தமிழக காவல்துறைக்கு சிபிஎம் மாநிலக்குழு கண்டனம் சென்னை, பிப். 18 - கோரிக்கைகளுக்காகப் போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது வன்முறையை பிர யோகித்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்ட னம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ர வரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலை வர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில செயற் குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: மறியலில் ஈடுபட்டுக் கைதான 32 ஆயிரம் பேர் ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பரா மரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் - (TARATDAC) 2026 பிப்ரவரி 10 அன்று மாநிலம் முழுவதும் காலவரையற்ற மறியல் போராட்டத் தைத் தொடங்கியது. பிப்ரவரி 12 வரை மாநிலம் முழுவதும் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டமன்றக் கூட்டம் தொடங்க இருந்ததை முன்னிட்டு, செவ்வாயன்று (17.02.2026) சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த சங்கம் திட்டமிட்டிருந்தது. காவல்துறை கேட்டுக்கொண்ட அடிப்ப டையில் சிவானந்தா சாலைக்கு இப்போராட்டம் மாற்றப்பட்டது. 20 பேருந்துகளில் ஏற்றி நள்ளிரவில் அலைக்கழிப்பு மதியம் 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளை அமரவைக்க ஏற்பாடு, கழிப் பறைகள் எதுவும் இல்லை. இந்நிலையில், இரவு 7 மணியளவில் போலீ சார் திருமங்கலம் அருகே உள்ள பெரியார் சமூகக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதாக அறி வித்து, மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட சிலரை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு, மற்ற மாற்றுத் திறனாளிகளை 20 பேருந்துகளில் ஏற்றிய பிறகு, பேருந்துகளைப் பூட்டி, எங்கும் நிறுத்தா மல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அலைக்கழித்துள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் அனைவரையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து சொந்த ஊர் களுக்கு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப காவல் துறை முயற்சி செய்தது. மாற்றுத் திறனாளிகள் உறுதியாக மறுத்துப் போராட்டம் நடத்திய பிறகு சென்னை கோயம் பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணி அளவில் கொண்டு வந்து பேருந்துகளோடு மாற்றுத் திறனாளிகளை விட்டு விட்டு காவல் துறையினர் சென்றுள்ளனர். மின்சாரத்தை நிறுத்தியதுடன் வலுக்கட்டாயமாக இழுத்து கைது இதற்கிடையில், சங்கத்தின் மாநிலத் தலை வர்கள் வைக்கப்பட்டிருந்த ராஜரத்தினம் மை தானத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டு யாரும் யாரையும் அணுக முடியாத அளவிற்கு இருட்டில் தள்ளிய காவல்துறையினர், நள்ளிரவு 1.30 மணியளவில், தலைவர்களை வலுக் கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றியுள்ளனர். அப்போது, காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்து தூக்கி கீழே போட்டதில் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி பலத்த காயமடைந்து மயக்கமடைந்துள்ளார். காய மடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். உடனிருந் தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்து வந்து ஜான்சிராணியை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். குடிநீர், உணவு எதுவும் வழங்காமல் சித்திரவதை இவ்வாறு காவல்துறையானது, இரவு முழு வதும் குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்கா மல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழித்து, தாக்கி சித்திரவதை செய்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன் மையாக கண்டிக்கிறது. இத்தகைய மோச மான நடவடிக்கைகளுக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு வலியுறுத்துகிறது. மாற்றுத் திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும், அவர்களது உரிமைகள் மனித உரிமைகளுக்கு ஈடானது என உறுதி அளிக்கும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடு கள் மாற்றுத் திறனாளிகள் உரிமை சாச னத்தில் 7-ஆவது நாடாக கையெழுத்திட்டு ஏற்ற நாடு இந்தியா என்ற அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தற்போது ஆந்திர மாநில அரசு வழங்குவது போன்று தமிழ்நாட்டிலும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இது சம்பந்தமாக உடனடியாக சங்கத் தலைவர் களை அழைத்துப் பேசி தீர்வு காண தமிழ் நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்து கிறது. இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

காவல்துறை அராஜகத்திற்குப் பல்வேறு கட்சிகள் கண்டனம்! மாற்றுத்திறனாளிகள் மறியல்

சென்னை, பிப். 18 - உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் பேருந்து களில் ஏற்றி அலைக்கழித்த காவல்துறையின் அராஜகப் போக்கிற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலை வர் தோ. வில்சன் கூறுகையில், “இரவு 7 மணிக்கு எங்களைப் பெரியார் சமூக நலக் கூடத்திற்கு மாற்றுவதாகக் கூறி 18 பேருந் துகளில் ஏற்றிச் சென்றனர். ஆனால், அங்கு அழைத்துச் செல்லாமல் சென்னை முழு வதும் அலைக்கழித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சில பேருந்துகளைக் கிளாம் பாக்கத்திலும், சிலவற்றைக் கோயம்பேட்டிலும் விட்டுவிட்டுச் சென்றனர். உணவு, தண்ணீர் இன்றி முடக்கப்பட்ட நிலையிலும் நாங்கள் பேருந்துகளிலேயே போராட்டத்தைத் தொடர்ந் தோம். காவல்துறையினரின் அராஜகமான கையாளுதலால் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி மயக்கமடைந்து, தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார். அண்டை மாநிலங்களை விடக் குறைவு மேலும் அவர் பேசுகையில், “ஆந்திராவில் ரூ. 6,000 முதல் ரூ. 15,000 வரையும், புதுச்சேரி மற்றும் தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் ரூ. 4,000-க்கும் அதிகமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஜிடிபி-யில் 2-வது இடத்தில் உள்ள தமிழ் நாட்டில் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுவது அநீதியாகும். எங்களது நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். புகார் காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக காவல்துறை தலைமை இயக்குநர் அலு வலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி. செல்வா, வழக்கறிஞர் திருமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர் குழு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, துணைச் செயலாளர் எம்.குமார் மனு அளித்தனர்.

போராட்டம் ஒத்திவைப்பு

மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் புதன்கிழமையன்றும் தொடர்ந்த நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திமுக அரசு மே மாதம் மீண்டும் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சரின் முதல் கையெழுத்து, மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகை உயர்வுக்கானதாக இருக்கும் என்று முதலைமைச்சரின் சார்பில் உறுதியளித்தார். இதனையேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் தெரிவித்துள்ளார்.