கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
13 Jan 2026, 3:17 pm

விதிமீறல்: 773 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

தருமபுரி, ஜன.13- தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில், 2025 ஆம் ஆண்டு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 395 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விபத்தில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். 2024 ஆம் ஆண்டு 1436 சாலை விபத்துகளில் 387 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 1421 சாலை விபத்து களில் 350 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் இணைந்து பொதுமக்க ளுக்கு தினமும் சாலை பாதுகாப்பு விதிமுறை களை எடுத்துக்கூறி விபத்துக்களை குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்த வரை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. 2025 ஆம் ஆண்டில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றி சென்ற 312 சரக்கு வாக னங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 218 வாகனங்களுக்கும், அனுமதிச்சீட்டு இல் லாமல் இயக்கிய 184 வாகனங்களுக்கும், அதிவேகமாக இயக்கப்பட்ட 1501 வாகனங்க ளுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கப் பட்ட 424 வாகனங்களுக்கும் அபராதம் விதிக் கப்பட்டது. சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 899 வாகனங்க ளும், சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லா மல் இயக்கப்பட்ட 570 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டதால் 38 பேரின் ஓட்டு நர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட் டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக மாக ரத்து செய்யப்பட்டுள்ளன, என்றனர்.

காட்டுப்பன்றிகளால் பாதிப்பு: விவசாயிகள் போராட்டம்

ஈரோடு, ஜன.13- காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியு றுத்தி ஆசனூரிலுள்ள மாவட்ட வன அலுவ லகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற் றும் தாளவாடி வனப்பகுதிகளிலிருந்து வெளி யேறும் காட்டுப்பன்றிகள், விளைநிலங்க ளுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட் டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக்கண்டித்து தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சுந்தரம் தலைமை யில் விவசாயிகள், பொதுமக்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்த வனத்துறை அதிகா ரிகள் முன்வராத நிலையில், காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு, ஆசனூரிலுள்ள மாவட்ட வன அலுவலகத்துக்குச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து சத்தியமங்கலம் காவல் துணை கண் காணிப்பாளர் முத்தரசு, ஆசனூர் மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் கார்கே உள் ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வனத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவி லான விளைநிலத்துக்கு வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நகை கடை உரிமையாளர் கைது

நாமக்கல், ஜன.13- ராசிபுரம் அருகே தங்க நகையை சரி செய்வ தாகக் கூறி வாங்கிக்கொண்டு, திரும்ப தராமல் ஏமாற் றிய தங்க கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ரமேஷ் (38). இவர் ராசிபுரம் கடைவீதி பகுதியில் எம்.எஸ் பாபு ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த வளர்மதி(58) என்பவர் அவரது கடையில் சுமார் 8 சவரன் மதிப்பிலான தங்க செயின் வாங்கியதாகவும், 6 மாதங்களில் சேதமடைந்த தால் அதனை சீரமைப்பதற்காக ரமேஷிடம் வழங்கி உள்ளார். ஆனால் ரமேஷ் சீரமைப்பதற்காக வாங்கப் பட்ட நகையை வளர்மதிக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், பின்னர் ரமேஷ் கடையை காலி செய்துவிட்டு தலைமறைவானதாக சொல்லப்படுகி றது. வளர்மதி தான் நகையை பறிகொடுத்த நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்ற நாமக்கல் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டதில், அவர் திருப்பூர் பகுதியில் மருந்துக்கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற ராசிபுரம் காவல் துறையினர் ரமேஷை கைது செய்து காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட னர். மூதாட்டி வளர்மதிக்கு எட்டு சவரன் தங்க நகை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் திங்களன்று நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். ரமேஷ் நகைக் கடை வைத்திருந்த போது இது போன்று பல நபர்களி டம் பணமாகவும், நகையாகவும் பெற்று மோசடி செய்த தாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மருந்துக்கடை ஊழியர் கொலை மனைவி உட்பட 6 பேர் கைது தருமபுரி, ஜன.13- தருமபுரியில் மருந்துக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, மருமகன் உட்பட 6 பேரை போலீசார் திங்களன்று இரவு கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், எலங்காட்டுகொட்டாய் பகு தியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (47). இவர் மருந்துக் கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவ ரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என உள்ளனர். கடந்த ஜன.7 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஞாயிறன்று மதிகோன்பாளையம் பகுதியிலுள்ள ஏரி யில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்து கிடந்தது ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முறையற்ற உறவுக்கு தடையாக இருந்ததால், ஆறுமுகத்தின் மருமகன் சீதாராமன் சிலருடன் சேர்ந்து அவரை கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசியது தெரியவந்தது. அதன்படி, தருமபுரியைச் சேர்ந்த சீதாராமன் (33). ஆட்டோ ஓட்டுநரான இவர், கருத்து வேறுபாடு கார ணமாக மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இந்நி லையில், ஆறுமுகத்தின் மனைவி ஜோதிக்கும் (45), சீதாராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கி டையே, தனது மகளை சீதாராமனுக்கு ஜோதி திரு மணம் செய்து வைத்தார். இந்த விவரம் தெரியவந்த தால் ஜோதியின் மகள் சீதாராமனை பிரிந்து சென்றார். ஆனால், சீதாராமன் ஜோதியுடன் பழக்கத்தை தொடர்ந் ததை, ஆறுமுகம் கண்டித்துள்ளார். இதனால் ஆறுமு கத்தை கொலை செய்ய சீதாராமன் திட்டமிட்டுள்ளார். கடந்த ஜன.7 ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சீதாராமன், ஆறு முகத்தை கல்லால் தாக்கி உள்ளார். இதில் படுகா யமடைந்த ஆறுமுகம் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதற்கு ஜோதி உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சீதாராமன், ஜோதி மற்றும் சீதாராமனின் நண்பர்களான சரவணன் (37), ஜெய்சங்கர் (32), பிரவீன்குமார் (25), முருகன் (26) உள்ளிட்ட 6 பேரையும் தருமபுரி நகர போலீசார் திங்க ளன்று இரவு கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் உண்ணாநிலை ஈரோடு, ஜன.13- தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து காந்தியடிகளின் பெயரை நீக்கியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாநிலை இயக்கத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து காந்தியடிகளின் பெயரை ஒன்றிய மோடி அரசு நீக்கியதைக் கண்டித்து ஈரோடு மாநகர் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாநிலை இயக்கம் நடைபெற் றது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடைபெற்ற இந்த இயக்கத்தில் பலர் கலந்து கொண்டனர்.