ஒரு வழிச் சாலையில் விதிகளை மீறி பயணம்: பி.என்.சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
22 Nov 2025, 3:59 pm
<p>திருப்பூர், நவ.22 - திருப்பூரின் முக்கிய சாலைகளில் ஒன்றான பி.என்.சாலையில், ஒரு வழிச் சாலை விதிகளை மீறி எதிர்த்திசையில் வாகனங்களை வேகமாக ஓட்டி வருவ தால், விபத்து நேரும் அபாயத்துடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. இதனால், அன்றாடம் அப்பாதை யில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள் ளாகியுள்ளனர். ஒருவழிப் பாதை விதிமீறல்களால் போக்குவரத்து நெரிசல்: திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து பழைய பேருந்து நிலை யம் செல்லும் பி.என்.சாலை, மேட்டுபா ளையம், மில்லர் ஸ்டாப் வழியாக புஷ்பா தியேட்டர் வரை ஒரு வழிச் சாலையாக (ஒன்வே) அமைக்கப்பட் டுள்ளது. அதேபோல், எதிர்த் திசையில் புஷ்பா தியேட்டர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ராம்நகர் வழியாக அல்லது குமார் நகர், 60 அடி சாலை வழியாக பி.என்.சாலையில் இணைய வேண்டும். ஆனால், வாகனப் போக்கு வரத்து விதிகளை பெரும்பாலான தனி யார் மினி லோடு வாகனங்கள், இருசக் கர வாகனங்கள் கண்டுகொள்வ தில்லை. புதிய பேருந்து நிலையம் நோக்கி விரைந்து செல்வதற்காக, பல வாகனங்கள் மில்லர் நிறுத்தம், லட்சுமி நகர், மேட்டுப்பாளையம் வழியாக ஒரு வழிச் சாலையில் எதிர் திசையில் இருந்து நேரடியாக விரைந்து வருவ தை காண முடிகிறது. இதன் விளை வாக, குறிப்பாக காலை, மாலை நேரங் களில் இச்சாலையில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், காலை 9 மணிக்கு இந்த வழியாக வந் தால் எதிர் திசையில் இருந்து வரும் பைக்குகள் மற்றும் வாகனகளும் திடீர் என்று முன்னால் இருந்து வந்து கொண்டே இருக்கும். குறுக்கிட்டு வந்து நிறுத்தும். 15 நிமிட பயணம் 30 நிமிட பயணமாக மாறிவிடுகிறது. விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இந்த சாலை யில் பயணிக்கும் போதெல்லாம் உள் ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என வாகன ஓட்டி ஒருவர் புலம்பிச் சென்றார். காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இது தொடர்பாக, காவல்துறை உடனடியாக தலையிட்டு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவ டிக்கை எடுத்தல், கூடுதலாக போக்கு வரத்துக் காவலர்களை இந்தப் பகுதி யில் நிலையாக நியமிக்க வேண்டும். ஆங்காங்கே ஒரு வழி சாலை குறித்து எச்சரிக்கை தட்டிகள் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமே இந்தப் பிரச் சனையை தீர்க்க முடியும் என்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு போக்குவரத்து விதிமீறல் களைக் கட்டுப்படுத்த காவல்துறை உட னடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
