தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வின்பாஸ்ட் கார்கள் அனுப்பி வைப்பு

5 Aug 2026, 9:59 pm
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து  வின்பாஸ்ட் கார்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வின்பாஸ்ட் கார்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி, ஆக. 5-தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு மாதத்துக்கு 1000 முதல் 2 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்திசெய்யப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

அதன்படி கார்களை ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பாக அனுப்ப ரயில் போக்குவரத்து உகந்ததாகஉள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 10 சரக்கு ரயில்களில் மின்சார கார்களை பல்வேறு நகரங்களுக்கு அனுப்பமுடிவு செய்யப்பட்டு உள்ளது.தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரயில் மூலம் 100மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்காக கார்களை ஏற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் இந்த கார்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு சரக்கு கட்டண வருமானமாக ரூ.22.07 லட்சம் வருவாய்கிடைத்து உள்ளது. இந்த சரக்கு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுத்த முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர்கணேஷ் தலைமையிலான வர்த்தக வளர்ச்சிக் குழுவுக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பாராட்டுதெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.