தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீண்டும் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் : மீம்ஸ்கள் மூலம் நடுங்கும் பாஜக

12 Dec 2025, 2:40 pm
மீண்டும் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் : மீம்ஸ்கள் மூலம் நடுங்கும் பாஜக
<p><strong>மீண்டும் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் : மீம்ஸ்கள் மூலம் நடுங்கும் பாஜக</strong></p> <p>சண்டிகர் நாட்டின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் &nbsp;2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் &nbsp;பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிலரின் சூழ்ச்சியால் (பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் உள்ளிட்டோரால்) மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்ததால் தகுதி &nbsp;நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் &nbsp;ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவில்லை. &nbsp;ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளி யேறிய மன வேதனையில், மல்யுத்த விளை யாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற அவர், பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு ஹரியானா சட்டமன்றத் &nbsp;தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வினேஷ் போகத். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், கடந்த ஜூலை மாதத்தில் வினேஷ் போகத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 31 வயதான வினேஷ் போகத், தான் மீண்டும் மல்யுத்த களத்துக்குத் திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&rdquo;பாரீஸ் ஒலிம்பிக்தான் முடிவா? என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். நீண்ட நாள்களாகவே என்னிடம் அதற்கு பதில் எதுவும் இல்லை. நான் மீண்டு வரு வதற்காக நான் போட்டிக் களத்தில் இருந்து மட்டுமல்ல, மன அழுத்தம், எதிர்பார்ப்புகள், சுய விருப்பங்களில் இருந்து கூட விலகி இருக்க வேண்டிய சூழல் இருந்தது. உலகம் இதுவரை கண்டிராத எனது பயணத்தின் உயரத்தையும், தோல்விகளையும், தியாகங் களையும் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் ஆகியுள்ளது. அதில், என்னைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் களத்துக்கு திரும்பி போட்டியிட விரும்புகிறேன். அந்த நேரத்தில் என்னுள் இருக்கும் நெருப்பு எரிந்துகொண்டு தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண் டேன். நான் எவ்வளவு தூரம் சென்றாலும் என்னில் ஒரு பாதி களத்திலேயே தான் &nbsp;இருக்கிறது. மீண்டும் 2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி பயமின்றி முன்னேறுகிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லப்போவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர் லீடராக இணைந்துள்ளான்&rdquo; எனக் கூறியுள்ளார். &nbsp;வினேஷ் போகத் அறிவிப்பை தொடர்ந்து பாஜக குண்டர்கள் &ldquo;மீண்டும் 100 கிராம்&rdquo; என கிண்டல் மற்றும் ஆபாச வார்த்தைகளுடன் சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வு மிக்க மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.