விளையாட்டு
9 May 2026, 10:06 pm

வினேஷ் போகத்திற்கு தடை

இந்தியாவின் முன் னணி நட்சத்திர வீராங்கனையான வினேஷ் போகத் தனது ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டு, மீண்டும் மல்யுத்தத்தில் விளையாட பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகின.

இத்தகைய சூழலில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வினேஷ் போகத்திற்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட தேர்வு அளவுகோல் களின்படி, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டித் தகுதிச் சுற்றில் பங் கேற்க முடியும். 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வினேஷ் எந்தவொரு தொ ழில்முறைப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்ப தால், இந்த புதிய விதி அவ ரைப் போட்டியில் இருந்து தானாகவே விலக்கி வைக்கிறது.

குறிப்பாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளின்படி, ஒரு வீரர் ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் போட்டிகளுக்குத் திரும்ப விரும்பினால், அவர் 6 மாதங்களுக்கு முன்பே அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். இந்த 6 மாத காலத்தில் அந்த வீரர் ஊக்கமருந்து பரிசோத னைகளுக்கு உட்படுத்தப் படுவார்.

வினேஷ் இந்த கட்டாயக் கால அவகாசத்தை முறை யாகப் பூர்த்தி செய்ய வில்லை. இதனால் ஜூன் 26 வரை அவருக்கு தடை விதிக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே நெருக்கடி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தடை குறித்து வினேஷ் போகத் கூறுகையில், “தனது மறு பிரவேசத்திற்குப் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

தேசிய ஓபன் தரவரிசைப் போட்டிக்காக நான் விண்ணப்பிக்க முயன்ற போது பதிவு இணையதளம் மூடப்பட்டிருந்தது.

புகார்கள் எழுந்த பிறகே அது மீண்டும் திறக்கப் பட்டது. பெடரேஷன் கோப்பை மல்யுத்தத்தில் பங்கேற்க விரும்பியபோது, கடைசி நிமிடத்தில் தகுதி விதிகள் மாற்றப்பட்டு தனது வாய்ப்பு தடுக்கப்பட்டது. இது போல தான் தற்போ தைய தடையும்” என அவர் குற்றம்சாட்டினார்.