விளையாட்டு
22 May 2026, 9:21 pm

வினேஷ் போகத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்க! ஒன்றிய அரசு, இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

தாய்மையான பின்பு ஓய்வி லிருந்து மீண்டும் களத்தி ற்குத் திரும்ப இந்திய மல்யுத்த நட்ச த்திரம் வினேஷ் போகத் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் பாஜக தலைவர்களின் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய மல்யுத்த சம் மேளனம் புதிய விதிகள் (போட்டிகள் பங்கேற்பு விகிதம்), தாய்மை, பாரீஸ் ஒலிம்பிக் பிரச்சனை (100 கிராம் எடையால் தகுதி நீக்கம்) உள்ளிட்ட வைகளை குறிப்பிட்டு வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் பங்கேற்க தடை விதித்து, தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது.

இதனை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் வினேஷ் போகத் வழக்குத் தொடர்ந்தார்.

மே 21 அன்று, தில்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், வினேஷ் போகத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க மறுத்ததை தொடர்ந்து, வழக்கறிஞர் ராவ் (வினேஷ் தரப்பு) தில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய தற்காலிக அமர்வை அணுகினார்.

தேசிய அவமானம் இந்த அமர்வு முன்பு வெள்ளியன்று வினேஷ் போகத் வழக்கை விசார ணைக்கு எடுத்துக்கொண்டது.

வினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராவ், “தகுதிச் சுற்றுப் போட்டி தொடங்கு வதற்கு (தகுதிச் சுற்று) 12 மணி நேரத்திற்கு முன்பு தான் வினேஷுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியது.

அதில் 2024 பாரீஸ் ஒலிம்பிக் விவகாரங்கள் தேவை யின்றி எழுப்பப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் தகுதி நீக்கத்தை “தேசிய அவமானம்” என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அதனால் புதிய தகுதிக் கொள்கையை நீக்கிவிட்டு அவரைத் தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என நீதிபதிகளிடம் நோட்டீஸை வழங்கி வாதாடினார்.

நோட்டீஸை படித்ததும் கோப மடைந்த தில்லி உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி அமர்வு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சார்பில் ஆஜரான ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி, “நம் நாட்டில் மல்யுத்த விளை யாட்டிற்கு நீங்கள் (இந்திய மல்யுத்த சம்மேளனம்) இப்படித்தான் சேவை செய்கிறீர்களா? இறுதிப் போட்டி வரை சென்ற ஒரு பெண்ணுக்கு ஒலிம்பிக்கில் இத்தகைய அசம்பாவிதம் நடந்துள் ளது.

ஆனால் நீங்கள் அதனைத் தேசிய அவமானம் என்று எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் போட்டியில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தேசிய அவமா னமா? இந்த நாட்டு மக்கள் அவரை எவ்வாறு நடத்தினார்கள்? அது தேசிய அவமானமா? வினேஷ் கடந்த ஜூலை மாதம் தாயாகியுள்ளார், இப்போது நாம் மே மாதத்தில் இருக்கிறோம்.

நாம் தாய்மையைக் கொண்டாடும் ஒரு நாடு, அதனைத் தூற்றும் நாடு அல்ல. வினேஷ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு மல்யுத்த வீராங்கனை

அவரை குறிவைத்தே இந்தக் கொள்கையை மாற்றினீர்கள் என்று நாம் ஏன் கருதக் கூடாது? இத்தகைய நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகத்திற்குத் தெரியாதா? இதுதொடர்பாக ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள் ளது? அவர் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவர் என்றால், அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கூட வழங்க மாட்டீர்களா? அவர் ஏதேனும் விதிமீறல்களில் ஈடு பட்டாரா? இந்தக் கொள்கையை மாற்றும் முன்பு உங்களிடம் (ஒன்றிய அரசு) கலந்தாலோசிக்கப்பட்டதா? இது முற்றிலும் ஒரு பிற்போக்கான நட வடிக்கை, ஆனால் நீங்கள் (ஒன்றிய அரசு) அமைதியாக வேடிக்கை பார்க்கிறீர்கள்” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மோடி அரசு மழுப்பல் விளக்கம் கோரும் நோட்டீஸின் உள்ளடக்கங்களைக் கண்டு தானும் அதிர்ச்சியடைந்ததாக ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி அமர்வு,”இது அகில இந்திய குடிமைப் பணிக்கான நியமனமோ, நாடாளுமன்றத்திற்கான பரிந்துரையோ அல்லது ஒரு நீதிபதியின் நியமனமோ அல்ல. இது ஒரு சாதாரண தகுதிச் சுற்று.

அவர் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள்.

மல்யுத்த கூட்ட மைப்பு ஒன்றிய அரசிடம் உரிய அறி வுறுத்தல்களைப் பெற்று, வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து அவர் ஆசிய விளையாட்டுத் தகுதிச் சுற்றில் பங்கேற்பதை உறுதி செய்ய ஒரு நிபுணர் குழுவை அமை க்க வேண்டும்” என தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு, மதிய உணவு இடைவேளையை அறிவித்தது.

நிராகரிப்பு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்த போது, வினேஷ் போகத் தகுதிச் சுற்றில் பங்கேற்பதை ஒன்றிய அரசு தடுக்கவில்லை என்றும், அவர் தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெற்றால், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அவரை அனுப்ப அரசு விதிவிலக்கு பிரிவைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது என்றும் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மேலும், இந்தத் தகுதிச் சுற்றுகளுக்காக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கண் காணிப்பாளர் ஒருவரை நியமிக்க விளையாட்டு அமைச்சகம் தயாராக இருப்பதாகவும், தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வினேஷ் போகத் தைத் தகுதிச் சுற்றில் அனுமதிக்க வேண்டும் என்று மல்யுத்த கூட்டமைப் பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஒன்றிய அரசு வழக்கறிஞர், இந்த வழக்கை மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறும், அதற்குள் வினேஷ் போகத் தகுதி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கூட்ட மைப்பிற்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எனினும், கூட்டமைப்பின் இந்த வேண்டுகோளை நிராகரித்தது தில்லி உயர்நீதிமன்றம்.