தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை கரைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துமா?

1 hour before
விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை கரைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துமா?

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை கரைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துமா?

விழுப்புரம், செப்.25-விழுப்புரம் மாவட்டம் பிரதானமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி உள்ள மாவட்டமாக அமைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலையே நம்பி உள்ளனர்,மாவட்டத்தில் தென் பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, தொண்டியாறு,வராக ஆறு என்று அனைத்து ஆறுகளும் மழையே நம்பி உள்ள ஆறுகளாக உளாளன, மேலும் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை பராமரிப்பில் 505 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 650க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்த ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர்பிடிப்புகள் தான் விவசாயத்தின் ஆதாரமாக உள்ளன.மேலும் குளங்கள் மக்களின் அடிப்படை தேவைக்கு ஆதாரமாக உள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து வரும் உபரி நீர் அவ்வப்போது ஏரிகளுக்கும் வரும். ஆனால் பெரும்பாலும் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ, வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., என்று ஆண்டிற்கு சராசரி 1060.30 மி.மீ., மழை அளவாக உள்ளது.

இந்நிலையில் கடந்த, 2024ம் ஆண்டு 'பெஞ்சல்' புயலின்போது, மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைக் காட்டிலும் 111.45 மி.மீ., குறைந்து 526.66 மி.மீ., பெய்தது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான பாசன ஏரிகள் நிரம்பாததால் தற்போது வறட்சி ஏற்பட்டு ஆடி பட்டம் தேடி விதை என்ற விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழையானது அடுத்த மாதம் அக்டோபரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பருவமழையின்போது பெய்யும் மழைநீரை ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைக்க வரத்து வாய்க்கால்களை பருவமழைக்கு முன்பு தூர்வாரும் பணி முடிக்க வேண்டும் இல்லையேல் மழைநீர் வரத்து வாய்க்கால்கள் அருகே உள்ள நிலங்களில் பாய்ந்து நிலத்தில் உள்ள பயிர்களை மூழ்கடித்து விடும் நிலை ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது, அதனால் தமிழக அரசு விரைந்து சம்பந்தப்பட்ட துறைகளை போர்கால அடிப்படையில் முடுக்கி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த பெஞ்சால் புயலின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் ஆறு, ஏரி, குளங்களின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது, அதுபோல் இந்த ஆண்டும் நடந்து விடுமோ என்று விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது, அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் அணைகள், தடுப்பு அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையின் உறுதி தன்மையை சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கரைகளின் உறுதி தன்மைகள் குறைவாக உள்ள ஏரிகளுக்கு பருவமழை துவங்கும் முன்பு கரைகளை பலப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதின் மூலம் வடக்கு பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளத்தால் கரைகள் உடைந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைவதும், மழைநீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படும்.அதன்மூலம் ஆறு, ஏரி, குளங்களில் மழைநீர் தேங்கி நீர் மட்டம் உயர்ந்து, விவசாய சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் கரைகளின் உறுதி தன்மையை விரைந்து ஆய்வு செய்து பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.