விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்
3 Sept 2026, 12:55 am

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்

விழுப்புரம், செப்.2-தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க விழுப்புரம் மாவட்ட பேரவை கூட்டம்விழுப்புரத்தில் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயசங்கர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் தினேஷ் தொடக்க உரை யாற்றினார்.

கூட்டத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி,தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது உசேன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணி புரியும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவி யாளர் ஆகியோருக்கு கலந்தாய்வு முறையில் விருப்ப பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விழுப்பு ரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் கலந்தாய்வு முறையில் பணியிடமாறுதல் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றினர்.