தென்பெண்ணை ஆற்று குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்பு: பொதுமக்கள் அவதி
24 May 2026, 2:23 am

தென்பெண்ணை ஆற்று குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்பு: பொதுமக்கள் அவதி

விழுப்புரம், மே 22- விழுப்புரம் நகர மக்களுக்குக் குடிநீர் வழங்கும் தென்பெண்ணை ஆற்று ஒட்டுக் குழாயில் 18 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகரிலி ருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பாய்ந்தோடும் தென்பெண்ணையாற்றின் ஏனாதிமங்கலம் ஊராட்சிப் பகுதியிலிருந்து விழுப்புரம் நகரத்திற்குப் பெருங்குழாய்கள் அமைக்கப்பட்டுத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்குடிநீர் குழாயில் 18 இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டுத் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இத னால் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்பதால், அப்பகுதிகளில் கோரைப்புற்கள் மண்டி வளர்ந்துள்ளன.

இந்த அவல நிலைக்குத் தீர்வு காண விழுப்புரம் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இது வரை எந்தவொரு நடவடிக் கையும் எடுக்க வில்லை

. இது ஒருபுறமிருக்க, இவ்வளவு தண்ணீர் வீணாகக் கசிந்தாலும், நகரிலுள்ள முக்கியப் பிரமு கர்களின் வீடுகளுக்கும், ஒரு சில உணவகங்களுக்கும் தண்ணீர்சென்ற பிறகே, பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்படு வதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

மேலும், குழாய் உடைப்பால் தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரே சில நேரங்களில் குடிநீரோடு கலந்து வருவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தால் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்ப தாகவும் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

“ஆட்சி மாறினாலும் இந்த அவலக் காட்சி மாற வில்லை; எந்த ஆட்சி வந்தால் இவர்களின் அலட்சியப்போக்கு மாறுமோ தெரியவில்லை” எனப் பொதுமக்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.