தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுடுகாட்டுப் பாதை இன்றி வயல்வெளியில் பிணத்தைச் சுமந்து செல்லும் அவலம்! தணிக்கலாம்பட்டு கிராம மக்கள் வேதனை

11 Jun 2026, 11:32 pm
சுடுகாட்டுப் பாதை இன்றி வயல்வெளியில்  பிணத்தைச் சுமந்து செல்லும் அவலம்! தணிக்கலாம்பட்டு கிராம மக்கள் வேதனை
<p><strong>சுடுகாட்டுப் பாதை இன்றி வயல்வெளியில் பிணத்தைச் சுமந்து செல்லும் அவலம்! தணிக்கலாம்பட்டு கிராம மக்கள் வேதனை</strong></p><p>விழுப்புரம், ஜூன் 11- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் தணிக்கலாம்பட்டு கிராமத்தில், சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை வயல்வெளிகளின் வழியாகச் சுமந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் இறந்தால், அவர்களின் சடலங்களைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பாதை வசதி இல்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், &quot;1998-ஆம் ஆண்டு முதல் சுடு காட்டுப் பாதைக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல போராட்டங்களை நடத்தியும், அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்விதப் பலனும் இல்லை&quot; என்று வேதனை தெரி விக்கின்றனர். இதனால், நெல், கரும்பு மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் நிறைந்த வயல்வெளிகளின் ஊடாகவே பிணத்தைத் தூக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வயல்களில் சேறு, சகதி நிறைந்து காணப்படுவதால், சடலத்தைச் சுமந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும், அதன் காரணமாகச் சடலத்தைத் தவறவிடும் துயரமான நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன. வயல்வெளிகள் வழியாக உடலை எடுத்துச் செல்லும்போது விவசாயிகளுடன் மோதல் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, தமிழக அரசு இக்கிராம மக்களின் நீண்டகால வேதனையைப் புரிந்து கொண்டு, இறந்தவர்களுக்கு உரிய கண்ணி யத்துடன் இறுதிச்சடங்கு செய்ய ஏதுவாக, சுடுகாட்டிற்கு நிரந்தரப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று கண்டாச்சிபுரம் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் அடிப்படைத் தேவையாகக் கருதும் இப்பிரச்சனைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.