தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாதா கோயில் அருகே எரியாத தெருவிளக்கு ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் அவதி

19 Jun 2026, 12:58 am
மாதா கோயில் அருகே எரியாத தெருவிளக்கு ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் அவதி

மாதா கோயில் அருகே எரியாத தெருவிளக்கு ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் அவதி

விழுப்புரம், ஜூன் 18- விழுப்புரம் மாவட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் மாதா கோயில் அருகே நீண்ட நாட்களாகத் தெருவிளக்கு எரியாததால், பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒதியத்தூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ஒன்றான மாதா கோயில் அருகிலுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு, பல நாட்களாகப் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

அலட்சியம் இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், பழுதடைந்த மின்விளக்கைச் சரிசெய்ய இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உடனடியாகச் சம்பந்தப்பட்ட மின்விளக்கைச் சரிசெய்து, மாதா கோயில் பகுதியை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.