விழுப்புரம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் தேங்கியுள்ள கழிவுநீர் அவதியுறும் பயணிகள்!
29 Jun 2026, 11:51 pm
<p><strong>விழுப்புரம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் தேங்கியுள்ள கழிவுநீர் அவதியுறும் பயணிகள்!</strong></p><p>விழுப்புரம், ஜூன் 29 – விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில், கழிவுநீர் குட்டை போலத் தேங்கிக் கிடப்பதால் பயணி கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரத்திலிருந்து தென் மாவட்டங்க ளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயி ரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இந்தப் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் சமீபகாலமாகச் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையத்தின் வெளியேறும் நுழைவு வாயில் ஆர்ச் பகுதியில் நீண்ட நாட்களாகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தாலும் அந்தப் பள்ளத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாகச் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு முகம் சுளித்தபடி செல்லும் அவலநிலை நீடிக்கிறது. மேலும், பேருந்துகள் வேகமாகச் செல்லும்போது, அங்கு தேங்கியுள்ள கழிவுநீர் சிதறி, அருகில் நடந்து செல்லும் பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது பட்டுப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பள்ளத்தை அடைத்து, சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
