முந்தய பக்கம்

100 நாள் வேலை திட்ட ஊதியப் பிரச்சனை பொதுமக்கள் சாலை மறியல்

12 Jun 2026, 11:00 pm
100 நாள் வேலை திட்ட ஊதியப் பிரச்சனை பொதுமக்கள்  சாலை மறியல்

100 நாள் வேலை திட்ட ஊதியப் பிரச்சனை பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம், ஜூன் 12- 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை ஊதியம் வழங்கப்படாதது உள்ளிட்ட குளறுபடிகளைக் கண்டித்து, மாம்பழபட்டு கிராம மக்கள் வெள்ளிக் கிழமை விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை யில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதி காரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை யில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டுப் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram