விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலை
9 hours before
<p>விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்படுவதை கைவிட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை (ஆக.24) நீதிமன்றத்தை புறக்கணித்து, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சாலையில் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை தலைவர் ஏ.சங்கரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கண்ணப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
