கோலியனூரான் வாய்க்கால் அடைப்பு நிரந்தரத் தீர்வு காணப்படுமா?
30 Jun 2026, 12:08 am
<p><strong>கோலியனூரான் வாய்க்கால் அடைப்பு நிரந்தரத் தீர்வு காணப்படுமா?</strong></p><p>விழுப்புரம், ஜூன் 29 – விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் முதல் கோலியனூர் வரை செல்லும் கோலியனூரான் வாய்க்கால், முறையாகப் பரா மரிக்கப்படாததால் பெரும் சுகா தாரச் சீர்கேட்டை உருவாக்கி யுள்ளது. உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் தொடங்கி பாண்டி மேம்பாலம் வரை நீண்டிருக்கும் இந்த வாய்க்காலில், ஆக்கிர மிப்புகள் ஒருபுறமிருக்க, உள்ளூர் வியாபாரிகளும் குடியிருப்பவர்களும் கொட்டும் குப்பைகளால் எப்போதும் அடைப்பு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பெயரளவிற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை தூர் வாரும் பணிகளை மேற்கொண் டாலும், நிரந்தரத் தீர்வு எட்டப்பட வில்லை. இதனால், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் இனப்பெருக்க மையமாகவும் இப்பகுதி மாறி யுள்ளது. இன்னும் சில மாதங்க ளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தற்போதைய நிலை நீடித்தால் நகரின் பல பகுதிகள் வெள்ள த்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்க ளும் சமூக ஆர்வலர்களும் வலி யுறுத்தியுள்ளனர். பருவ காலத்திற்கு முன்பே இந்தச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.</p>
