விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் ஆட்டோ
22 Jul 2026, 11:49 pm
<p>விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க (சிஐடியு) பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா புதன்கிழமை (ஜூலை 22) நடைபெற்றது. விழாவிற்கு, ஆட்டோ ஓட்டுநர் சங்க மூத்த உறுப்பினர் ஐ. ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். மூர்த்தி, கொடி ஏற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் எம். முருகன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ். கணபதி, தவிச வட்டத் தலைவர் எம்.ராமலிங்கம் மற்றும் ஜெ.சௌந்தர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகளாக தலைவராக ஏ.விஜயகுமார், செயலாளராக எஸ். அய்யப்பன், பொருளாளராக பி. சுப்ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
