முந்தய பக்கம்

விழுப்புரம் காமராஜர் சாலை ஒருவழி சாலையாக்கப்படுமா?

4 Nov 2026, 1:13 am
விழுப்புரம் காமராஜர் சாலை ஒருவழி சாலையாக்கப்படுமா?

விழுப்புரம் காமராஜர் சாலை ஒருவழி சாலையாக்கப்படுமா?

விழுப்புரம், நவ.3-விழுப்புரத்தில் பிரபலமான நகைக்கடை சாலையான காமராஜர் சாலையை ஒரு வழி பாதையாக மீண்டும் மாற்ற போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் நகரம் பல்வேறு சுற்றுப்புற கிராமங்களின் வியாபார நகரமாக விளங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தீபாவளி வியாபாரத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் நகரத்தில் காமராஜர் சாலை என்பது நகை மற்றும் ஜவுளி கடைகளும், நிறைந்த சாலை. அதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

இந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் இடைவிடாமல் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இதன் காரணமாக அங்கு வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் காமராஜர் சாலையை ஒரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென்று காமராஜர் சாலை கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram