30 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 158 வீட்டு மனைப்பட்டாக்களை அளவீடு செய்ய வேண்டும் விதொச வலியுறுத்தல்
1 Oct 2026, 2:10 am

30 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 158 வீட்டு மனைப்பட்டாக்களை அளவீடு செய்ய வேண்டும் விதொச வலியுறுத்தல்

விழுப்புரம், செப்.30-விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், காடகனூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கு 1996-ல் வழங்கப்பட்ட 158 இலவச வீட்டுமனை பட்டாக்களை அளவீடு செய்து தரவேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செய லாளர் எஸ்.கணபதி, வட்ட தலைவர் எம்.பாபு, வட்ட செயலாளர் டி.குப்பன், விவ

சாயிகள் சங்கம் வட்ட துணை செயலாளர் கே.வீரன், விதொச, வட்ட குழு உறுப்பினர் கே.வீரன் வட்டத்துணை தலைவர் அந்தோணியம்மாள் ஆகியோர் கொண்ட குழுவினர் காடகனூர் கிராமத்தில் புத னன்று (செப்.30) பாதிக்கப்பட்ட பட்டயலின பயனாளிகளை சந்தித்து பேசினர்.

30 ஆண்டுகளாகிறது. இன்னும் வீட்டுமனை பட்டாக்களை அளந்து வீட்டு

மனை என்று அத்து காட்டவில்லை. அதி காரிகளின் அலட்சியத்தால் நாங்கள் அதில் வீடு கட்ட முடியாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட கண்டாச்சிபுரம் வட்டாட்சியரை 158 பயனாளிகளுடன் சந்தித்து மனு அளிப்பது என்றும் நடவடிக்கை இல்லையேல் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என மாவட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன் கூறினார்.